Aran Sei

இந்தியாவை கட்டுப்படுத்த நினைக்கும் நாக்பூர் அமைப்பு : இளைஞர்கள் முறியடிக்க ராகுல் காந்தி வேண்டுகோள்

credits : the indian express

பாரதிய ஜனதா கட்சி வெறுப்பை பரப்பி மக்களிடையே பிரிவினையை உண்டாக்குவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

126 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்திற்கு மூன்று ( மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 16) கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இரண்டு நாள் சுற்றுப் பயணமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அசாம் மாநிலத்துக்குச் சென்றுள்ளார். நாளைய தினம் அவர், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளார்.

இன்றைய தினம், அசாம் மாநிலத்தின், லஹோவால் கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார். அப்போது பேசிய அவர், அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தால், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

‘ஆர்எஸ்எஸ்-ன் சர்வாதிகாரத்தை எதிர்த்து சுதந்திரத்துக்கான அணிவகுப்பை தொடருவோம்’ – ராகுல் காந்தி

மேலும், ”எந்த ஒரு மதமும் வெறுப்பை பரப்புவதில்லை, ஆனால், பாஜக வெறுப்பை பரப்பி மக்களிடையே பிரிவினையை உண்டாக்குகிறது” எனவும் அவர் கூறியுள்ளார்.

‘ஆர்எஸ்எஸ்ஸை விமர்சிக்க காங்கிரஸுக்கு என்ன தகுதி இருக்கிறது – கர்நாடக முதல்வர் எடியூரப்பா

”பாஜக வெறுப்பின் மூலம் சமூகத்தைப் பிளவுப்படுத்துகிறது. அவர்கள் எங்கு சென்று வெறுப்பை பரப்பினாலும்,  அங்கு காங்கிரஸ் அன்பையும் நல்லிணக்கத்தையும் மக்களிடையே வலியுறுத்தும்” என்று மாணவர்களிடையே ராகுல்காந்தி தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் “விஷ்வ குரு” – இந்தியாவுக்கும் உலகத்துக்கும் என்ன கதி? : ஏ ஜி நூரானி

ஆர்எஸ்எஸ் அமைப்பை மறைமுகமாக சாடிய ராகுல் காந்தி, ”நாக்பூரில் இருக்கும் ஒர் அமைப்பு இந்தத் தேசத்தையே கட்டுப்படுத்த நினைக்கிறது, இந்தத் தேசத்தின் எதிர்காலமான  இளைஞர்கள் இந்த (ஆர்எஸ்எஸி-ன்) முயற்சியை அன்பின் மூலம் முறியடிக்க வேண்டும்” என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தி இந்துவின் செய்தி கூறுகிறது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்