மத்திய டெல்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
மிகவும் தீவிரம் குறைந்த வெடி மருந்து பயன்படுத்தப்பட்டு இருந்ததால், கார் கண்ணாடி சிதறியது தவிர வேறு உயிரிழப்புகளோ, சேதங்களோ இல்லையென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின கொண்டாடங்களின் இறுதி நிகழ்வாக நடைபெறும் பீட்டிங் தி ரிட்ரீட் விழாவிற்காகப் பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கூடியிருக்கும் விஜய் சவுக் பகுதியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் சம்பவம் நிகழ்ந்திருப்பதாக என்டிடிவி குறிப்பிடப்பட்டுள்ளது.
டிராக்டர் பேரணி Vs ரத யாத்திரை: விவசாயிகளை விமர்சிக்க பாஜகவுக்கு உரிமை உள்ளதா?
பிளாஸ்டிக் பையில் போர்த்தப்பட்டிருந்த வெடிபொருள், தூதரகத்திற்கு சில மீட்டர்கள் தொலைவில், ஜிண்டால் குடியிருப்பு வெளியே உள்ள நடைபாதையில் வைக்கப்பட்டிருந்தாகக் காவல்துறை தரப்பு கூறியதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.
தூதரகம் அமைந்திருக்கும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சாலை சுற்றி வளைக்கப்பட்டு காவல்துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும், டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகள், சிறப்புப் பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
தூதரகம் அமைந்துள்ள சாலையின் இருபுறத்தில் டெல்லி காவல்துறையின் மஞ்சள் நிற தடுப்புகள் அமைக்கப்பட்டு இருப்பதோடு, தூதரகத்தின் வெளியே காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டு இருக்கும் காணொளியை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது.
#WATCH | Delhi Police team near the Israel Embassy where a low-intensity explosion happened.
Nature of explosion being ascertained. Some broken glasses at the spot. No injuries reported; further investigation underway pic.twitter.com/RphSggzeOa
— ANI (@ANI) January 29, 2021
தேசிய தலைநகரில் இருக்கும் பாதுகாப்பு குறித்து விவாதிக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி காவல்துறை ஆணையர், உளவுத்துறை அதிகாரிகள் ஆகியோர் சந்தித்து கொண்ட சில தினங்களில், இந்த வெடி விபத்து நடந்துள்ளதாக என்டிடிவி செய்தியில் தெரிவித்துள்ளது.
குடியரசு தினத்தன்று காவல்துறையிருக்கும் பேரணியில் கலந்து கொண்ட விவசாயிகளின் ஒரு பிரிவினருக்கும் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, இது நிகழ்ந்தாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போக்சோ சட்டத்திற்கு புதிய விளக்கமளித்த நீதிபதி: மீண்டும் சர்ச்சையில் மும்பை உயர்நீதி மன்றம்
இன்று (ஜனவரி 29) நடைபெற்ற குண்டுவெடிப்பு மிகவும் சிறியதாக இருந்தாலும், இஸ்ரேல் தூதகரத்தை குறிவைத்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால், இதை உளவுத்துறை உன்னிப்பாக விசாரிக்கும் என என்டிடிவி கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.