Aran Sei

இந்திய ஊடகங்களில் 90% தலைமைப் பதவிகளில் உயர்சாதியினர் தான் உள்ளனர் – ஆக்ஸ்பாம் இந்தியா-நியூஸ்லாண்ட்ரி ஆய்வில் தகவல்

ந்தியாவில் உள்ள ஊடகங்களில் சுமார் 90% தலைமைப் பதவிகளில் உயர்சாதியினர் தான் உள்ளனர். அதிலும், ஒரு தலித் அல்லது பழங்குடியினரில் ஒருவர் கூட இத்தகைய ஊடகங்களில் தலைமை பதிவில் இல்லை என்று ஆக்ஸ்பாம் இந்தியா-நியூஸ்லாண்ட்ரி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் மிகப் பெரிய செய்தி ஊடக அமைப்பான தி மீடியா ரம்பிளில் ஆக்ஸ்பாம் இந்தியா-நியூஸ்லாண்ட்ரியின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ், பாஜக கட்டுப்பாட்டில் இந்திய ஊடகங்கள்: ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

அந்த அறிக்கையில், இந்தி மற்றும் ஆங்கில செய்தித்தாள்களில் எழுதப்படும் 5 கட்டுரைகளில் ஒவ்வொரு 3 கட்டுரைகளும் உயர்சாதி எழுத்தாளர்களால் எழுதப்படுகின்றன, அதே நேரத்தில் இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள எஸ்சி, எஸ்டி அல்லது பிற்படுத்தப்பட்ட சாதியினரின் இருந்து 1 கட்டுரை மட்டுமே வெளியிடப்படுகிறது.

செய்தித்தாள்கள், தொலைக்காட்சி செய்தி சேனல்கள், செய்தி வலைத்தளங்கள் மற்றும் ஆய்வுக்குட்பட்ட பத்திரிகைகளில் தலைமையாசிரியர், நிர்வாக ஆசிரியர் உள்ளிட்ட 121 தலைமை பதவிகளில், 106 பதவிகளில் உயர் சாதியினரும், 5 பதவிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், 6 பதவிகளில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். 4 பதவிகளில் அடையாளம் கண்டறிய முடியவில்லை.

பலமுனைகளில் வெற்றி பெற்ற விவசாயிகள் – அனைத்து முனைகளிலும் தோல்வியுற்ற ஊடகங்கள்

இந்தியாவில் உள்ள 87 செய்தி செய்தி தொகுப்பாளர்களில் (இந்தி சேனல்களில் 40 தொகுப்பாளர்கள் மற்றும் ஆங்கில சேனல்களில் 47 தொகுப்பாளர்கள்) ஒவ்வொரு நான்கு செய்தி தொகுப்பாளர்களில் மூன்று பேர் உயர் சாதியினராக உள்ளனர். மேலும் இவர்களில் எஸ்சி, எஸ்டி அல்லது பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த ஒருவர் கூட இல்லை.

செய்தி நிறுவனங்களின் பிரைம் டைம் விவாத நிகழ்ச்சிகளில் 70 விழுக்காட்டிற்கும் மேலாக உயர்சாதியினர் தான் பங்கெடுக்கின்றனர். ஆங்கில நாளிதழ்களில் வெளிவரும் கட்டுரைகளில் 5 விழுக்காட்டிற்கு சற்று அதிகமாக தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் கட்டுரைகள் வெளியாகின்றன. இந்தி செய்தித்தாள்களில் சுமார் 10 விழுக்காட்டிற்கும் கூடுதலாக தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் கட்டுரைகள் வெளியாகின்றன.

பெரும்பாலான ஊடகங்கள் ‘இந்து ராஷ்ட்ரிய சித்தாந்தத்தின்’ பிரச்சார ஆயுதமாக செயல்படுகிறது – என்.ராம் கருத்து

செய்தி வலைத்தளங்களில் ஆசிரியரின் பெயரைக் கொண்ட கட்டுரைகளில் சுமார் 72% உயர்சாதியினரால் எழுதப்பட்டவை. 12 பத்திரிகைகளின் அட்டைப் பக்கங்களில் இடம்பெற்றுள்ள 972 கட்டுரைகளில் 10 கட்டுரைகள் மட்டுமே சாதி தொடர்பான பிரச்சினைகளைப் பற்றியவை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

ஆக்ஸ்பாம் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் பெஹர் கூறுகையில், “கடந்த மூன்று ஆண்டுகளில் வெளியான எங்களது இரண்டாவது அறிக்கை இது. இந்தியாவில் உள்ள செய்தி நிறுவனங்கள் நாட்டில் உள்ள பெரும்பான்மையான விளிம்புநிலை மக்களை உள்ளடக்கிய இடம் அல்ல என்பதை இது காட்டுகிறது. தலித்துகள், பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதில் ஊடகங்கள் தோல்வியடைந்துள்ளன. நாட்டில் உள்ள ஊடகங்கள் சமத்துவம் என்ற அரசியலமைப்புக் கோட்பாட்டை அதன் செய்திகளில் மட்டுமல்ல, அதன் பணியமர்த்தல் நடைமுறைகளிலும் நிலைநிறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் மீதான பாஜக தாக்குதல் – பின் விளைவுகள் என்ன? – சிறப்புக் கட்டுரை

ஊடக நிறுவனங்கள் உடனடியாக பணியமர்த்தல் நடைமுறைகளில் ஒரு குறிப்பிடத்தக்க மறுசீரமைப்பை நடத்தி, நாடு முழுவதும் உள்ள செய்தி நிறுவனங்கள் மிகவும் மாறுபட்டதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாறுவதை உறுதி செய்வதும் முக்கியம். பாரபட்சம் மற்றும் அநீதி இல்லாத இந்தியாவை உருவாக்க இது முக்கியமானதாக இருக்கும் என்று அமிதாப் பெஹர் கூறியுள்ளார்.

இந்த அறிக்கை சுமார் 43 இந்திய அச்சு, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக நிறுவனங்களை அவற்றின் செய்திகளுக்காகவும், தலைமையின் சமூக அந்தஸ்து மற்றும் பத்திரிகையாளர்களின் சாதி அமைப்புக்காகவும் ஆய்வு செய்தது.

ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 20,000 க்கும் மேற்பட்ட பத்திரிகை மற்றும் செய்தித்தாள் கட்டுரைகள், 76 தொகுப்பாளர்கள் மற்றும் 3,318 விவாத நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பவர்கள், 2,075 பிரைம் டைம் விவாதங்கள் மற்றும் 12 மாத இணைய செய்தி நிறுவனங்கள் இதில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

Source : the hindu

நம்ம ஊரு ஆட்டுக்காரனின் அமெரிக்க சாகசம் | அதிபரைச் சொரிந்து விட்டு அடி வாங்கிய கதை | Aransei Roast

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்