வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்த கருத்திற்கு மன்னிப்பு கோர வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
நேற்று (மார்ச் 1) செய்தியாளர்களை சந்தித்த அவர், வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்களில் 90 விழுக்காட்டினர் நீட் தேர்வில் தோல்வியுற்றவர்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்கள் மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்கு ஏன் செல்கிறார்கள் என்பது குறித்து விவாதிக்க இது சரியான நேரம் இல்லை என தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போரில் முதல் உயிர் பலியாகியிருக்கும் வேளையில், அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருப்பதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
‘ரஷ்ய படையெடுப்பை முகலாயர்கள் ராஜபுத்திரர்களை படுகொலை செய்ததோடு ஒப்பிடலாம்’ –உக்ரைன் தூதர்
அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரந்தீப் சிங் சுர்ஜிவாலா, “மோடி அரசு 20 ஆயிரம் மாணவர்களை கைவிட்டுவிட்டது. அவர்களை மீட்கும் பொறுப்பைப் புறக்கணித்து விட்டு, அவர்கள் உக்ரைன் சென்றதை தவறாக சித்தரித்து வருகிறது. இது உணர்வின்மை மற்றும் அதிகாரத்துவத்தின் உச்சம். மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேளுங்கள்” என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நவஜ்யோது பட்நாயக் பதிவிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “அப்படியானால், உக்ரைனில் இருக்கும் மருத்துவ மாணவர்கள் இந்திய திரும்புவதற்கு உரிமை இல்லாததற்கு இதான் காரணம் என அமைச்சர் ஜோஷி கூறுகிறாரா?.” என கேள்வி எழுப்பியுள்ளார்.
Source : The Indian Express
தொடர்புடைய பதிவுகள்:
உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 1
உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 2
உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 3
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.