Aran Sei

தமிழக மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை – படகினை அரசுடமையாக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

லங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தும், அம்மீனவர்களின் படகினை அரசுடமையாக்கியும் இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 9 ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கிருபை என்பவருடைய விசைப்படகையும், அதில் இருந்த 9 மீனவர்களையும், இலங்கை எல்லைக்குள் மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படை சிறைபிடித்தது.  கிருபை, வளன் கவுசிக், மிக்கேயாஸ், சினிங்ஸ்டன், சாம்ஸ்டில்லர், மிஜான், பிரைட்டன், கிஷோக், மாரி ஆகிய 9 மீனவர்களை கொரோனா பரிசோதனைக்குப் பின்னர் கொரோனா தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தனர்.

’அத்துமீறும் சிங்களக் கடற்படை; வேடிக்கை பார்க்கும் இந்திய கடலோரக் காவல்படை’ – ராமதாஸ் கவலை

இந்நிலையில், இன்று (பிப்பிரவரி 8) இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில், நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் முன்பு, இவ்வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. விசாரணையின் முடிவில், இந்த மீனவர்கள் மீண்டும் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 9 இராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சிறைப்பிடிக்கப்பட்ட இவர்களின் விசைப்படகுகளை, இலங்கை வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டத்தின் கீழ் அரசுடமையாக்கப்படுகிறது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

’தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி அடிக்கிறார்கள்; திராணி இல்லாத மத்திய அரசு’ – கொதிக்கும் மீன சங்கத்தினர்

விடுதலை செய்யப்பட்ட இந்த மீனவர்கள், விரைவில் விமானம் வழியாகவோ அல்லது கடல் வழியாகவோ தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்