Aran Sei

கள்ளச்சாராயத்தால் 13 பேர் உயிரிழந்த வழக்கு – 9 பேருக்கு தூக்கு தண்டனை

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ற வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் 9 பேருக்கு தூக்கு தண்டனையும், 4 பெண்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி அம்மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மதுவிலக்கு அமலில் இருக்கும் பீகார் மாநிலத்தில், 2016 ஆம் ஆண்டு கள்ளச்சாரயம் அருந்திய 9 பேர் உயிரிழந்ததோடு, 6 பேர் பார்வை இழந்தனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரில் ஒருவர் விசாரணைக்காலத்தில் உயிரிழந்துவிட்டதாக, அரசு சிறப்பு வழக்கறிஞர் ரவி பூஷண் ஸ்ரீவஸ்தவா தெரிவித்ததாக, தி இந்து கூறியுள்ளது.

‘எங்களை மிரட்டவும் முடியாது, வாங்கவும் முடியாது’ – டைம் இதழ் அட்டையில் கர்ஜிக்கும் விவசாய பெண்கள்

நீதிபதி லவ் குஷ் குமார் வழங்கிய தீர்ப்பில், சாது பாசி, கன்ஹையா பாசி, நாகினா பாசி, லால்பாபு பாசி, ராஜேஷ் குமார், சனோஜ் குமார் பாசி, சஞ்சய் பாசி, ரஞ்சித் சவுத்ரி, முன்னா சவுத்ரி ஆகியோருக்கு மரண தண்டனையும், பெண் குற்றவாளிகளான லால்ஜரி தேவி, கைலாஷோ தேவி, இந்து தேவி, ரீட்டா தேவி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் வழக்கப்பட்டிருப்பதாக, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, மாநில அரசு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டுருந்தது.

”தீர்ப்புக்கு எதிர்த்து, நாங்கள் பட்னா உயர்நீதிமன்றம் சொல்வோம்” என குற்றம்சாட்டப்பவர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் வேத் பிரகாஷ் திவாரி கூறியதாக, தி இந்து தெரிவித்துள்ளது.

நந்திகிராமில் மம்தா போட்டியிட்டால் தோற்கடிப்போம், பாஜக சவால் – சவாலை ஏற்ற மம்தா பானர்ஜி

பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்திய சில மாதங்களில் நிகழ்ந்த கள்ளசாராய உயிரிழப்புகள் வழக்கில் தொடர்பிருப்பதாக, மூன்று துணை ஆய்வாளர்கள், ஐந்து உதவி துணை ஆய்வாளர்கள் மற்றும் 13 காவலர்கள் உள்ளிட்ட 21 பேரை, 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அம்மாநில அரசு பணிநீக்கம் செய்தது.

பீகார் மாநிலத்தில் 2016 ஆம் ஆண்டில் புதிய கலால் மற்றும் தடைச் சட்டத்தால், மதுபானம் குடிப்பது மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்பட்ட நான்கு மாதங்களில், அம்மாநிலத்தில் கோபால்கஞ்ச் பகுதியில் கள்ளச்சாராயத்தை அருந்திய 19 பேர் உயிரிழந்ததோடு, 6 பேர் பார்வை இழந்தனர்.

மியான்மர் ராணுவத்திற்கு ஆதரவான யுடியூப் சேனல்கள் நீக்கம் –  ஃபேஸ்புக்கை தொடர்ந்து யுடியூப் நடவடிக்கை

இது தொடர்பாக கோபால்கஞ்ச் மாவட்டம் கஜுர்பானி பகுதியில், காவல்துறையினர் நடத்திய சோதனையின்போது, நிலத்தடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,000 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கில் முதன்மை குற்றவாளியாக நாகின் பாசி என்பவர் கைது செய்யப்பட்டார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்