Aran Sei

மனைவிக்கு கணவன் கீழ்ப்படியலாமா?: இந்திய ஆண்கள் கூறியதென்ன – ஆய்வு தகவல்

ந்தியர்கள் பெண்களை அரசியல் தலைவர்களாக ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் பெரும்பாலும் குடும்ப வாழ்க்கையில் கணவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றே விரும்புகிறார்கள் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை கூறுகிறது.

‘இந்தியர்கள் தங்களது குடும்பங்கள் மற்றும் சமூகத்தில் ஆண் மற்றும் பெண்களின் பாத்திரங்களை எவ்வாறு பார்க்கிறார்கள்’ என்ற தலைப்பில் 2019 நவம்பர் முதல் 2020 மார்ச் வரை 18 வயதிற்கு மேற்பட்ட 29,999 இந்தியர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கப் பள்ளிகளிலேயே நடவடிக்கையென கேரள அரசு அறிவிப்பு – பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டுமென திமுக எம்.பி கனிமொழி வேண்டுகோள்

இந்த ஆய்வின் படி 55% இந்தியர்கள் ஆண்களும் சரி, பெண்களும் சரி, சமமான நல்ல அரசியல் தலைவர்களை உருவாக்குகிறார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும் “மனைவி எப்போதும் தனது கணவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற எண்ணத்தை 10 இல் 9 இந்தியர்கள் வெளிப்படுத்துகிறார்கள்” என்றும், பெண்களும் கிட்டத்தட்ட இதே கருத்தைச் சற்று குறைவாக 61% – 67% பேர் ஒப்புக்கொள்கிறார்கள் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

பெரும்பாலான இந்தியர்கள், ஆண் மற்றும் பெண்களின் வேலைகளில் சமத்துவக் கருத்துக்களைக் கூறியுள்ளனர். அவ்வகையில், 62% பேர் குழந்தைப் பராமரிப்பில் ஆண்களும் பெண்களும் பொறுப்பேற்க வேண்டும் என்று கருத்து கூறியுள்ளனர். ஆனாலும் 34% பேர் குழந்தை பராமரிப்பு என்பது “முதன்மையாகப் பெண்களின் வேலை என்றே நம்புவதாக அறிக்கை கூறியுள்ளது.

‘உடலுறவிற்கு மனைவியின் சம்மதம் கட்டாயமா?’- எங்களுக்கு திருமணமே வேண்டாமென ட்வீட் செய்யும் ஆண்கள்

“பணம் சம்பாதிப்பதற்கு ஆண் பெண் ஆகிய இருவரும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று 54% கூறியிருந்தாலும், பணம் சம்பாதிப்பது என்பது முக்கியமாக ஆண்களின் கடமை என்றே 43% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். சமூகத்தில் குறைவான வேலைகள் இருக்கும் சமயத்தில் ​​​​பெண்களை விட ஆண்களுக்கே வேலைக்குச் சேர அதிக முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று 80% இந்தியர்கள் கருத்து கூறியிருக்கின்றனர்.

கிட்டத்தட்ட 94% பேர் வீட்டிற்கு ஒரு மகன் வேண்டும் என்றும், 90% பேர் வீட்டிற்கு ஒரு மகள் வேண்டும் என்றும் கருத்து கூறியுள்ளனர். பெற்றோரின் சொத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம பங்கு உண்டு என்று 64% இந்தியர்கள் கருத்து கூறியுள்ளனர். ஆனாலும், வயதான பெற்றோரைப் பராமரிக்கும் முக்கிய பொறுப்பு மகன்களுக்குத்தான் உண்டு என்று 10 இல் 4 பேர் கூறியுள்ளனர். வெறும் 2% பேர் மட்டுமே பெண்களுக்கு இதில் பொறுப்பு உண்டு என்று தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள பல்வேறு சமூக, மத மற்றும் பொருளாதார காரணங்களுக்காக, குடும்பங்கள் தங்களது மகள்களை விட மகன்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க நினைக்கின்றனர். பிறக்கப்போகும் குழந்தையை ஆணா, பெண்ணா என்று தெரிந்து கொண்டு கருக்கலைப்பு செய்வதை 40% இந்தியர்கள் ‘சில சூழ்நிலைகளில் ஏற்றுக்கொள்ளத்தக்கது’ என்று பார்க்கிறார்கள். ஆனாலும் 42% இதை ‘முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கருத்து கூறியுள்ளனர்.

மனைவியைக் கணவன் பாலியல் வல்லுறவு செய்வது குற்றமா? இல்லையா? – விரைவில் முடிவெடுக்க ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவின் தென் மாநிலங்கள் அடைந்துள்ள சிறந்த சமூக-பொருளாதார விளைவுகளால் இந்தியாவின் பிற பகுதிகளை விட அதிகமான பாலின சமத்துவ அம்சங்களைக் கொண்டுள்ளன. மனைவி எப்பொழுதும் கணவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று 94% வட இந்தியர்கள் விரும்பும் போது தென் இந்தியர்களில் 75% மட்டுமே அவ்வாறு கருத்து கூறியுள்ளனர்.

குடும்பத்தில் உள்ள ஆண்களே நிதி முடிவெடுக்கும் பொறுப்பு உள்ளது என்று 25% வட இந்தியர்கள் கருத்து கூறியுள்ள நிலையில் தென் இந்தியர்கள் 13% பேர் மட்டுமே அவ்வாறு கருத்து கூறியுள்ளனர். மேலும் குழந்தை பராமரிப்பில் பெண்களே முதன்மையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று 44% வட இந்தியர்கள் கருத்து கூறியுள்ள நிலையில் 30% தென் இந்தியர்கள் மட்டுமே இவ்வாறு கருத்து கூறியுள்ளனர்.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்