Aran Sei

ஜார்கண்டில் நடைபெற்ற கரம் பூஜா திருவிழா – தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த 9 சிறுமிகள்

ஜார்க்ண்ட் மாநிலம் லத்தேஹர் மாவட்டத்தில் நடைபெற்ற கரம் பூஜா திருவிழாவின்போது 12 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட உள்ள 7 சிறுமிகள் உட்பட 9 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த 7 சிறுமிகளும் லத்தேஹர் மாவட்டத்தின் பாலுமத் பகுதியின் பக்ரு கிராமத்தில் நீரில் மூழ்கி இறந்துள்ளனர் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

துணை ஆணையர் அபு இம்ரான், “கிராமவாசிகள் கூறியதுபடி, முதலில் இரண்டு சிறுமிகள் நீரில் இருந்து வெளியே வர போராடியுள்ளனர். அவர்களைக் காப்பாற்ற மற்ற 5 சிறுமிகளும் முயன்றபோது, 7 பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களை சதர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, அவர்கள் உயிரிழந்துவிட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.” என கூறியுள்ளார்.

லத்தேஹர் மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறுமிகள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என இம்ரான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், “லத்தேஹகர் மாவட்டத்தில் நீரில் மூழ்கி 9 சிறுமிகள் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்ததேன். இழந்த் ஆத்மாக்களுக்கு கடவுள் அமைதியை வழங்குவார் மற்றும் இழந்த குடும்பங்களுக்கு இழப்பைத் தாங்கும் சக்தியை வழங்குவார்” என தெரிவித்துள்ளார்.

Source : The Indian Express 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்