Aran Sei

மக்களுக்காக உழைத்த மருத்துவர் கொரோனா தொற்றால் மரணம் – ஏழைகளுக்கும், மாணவர்களுக்கும் இலவச மருத்துவம் வழங்கியதாக மக்கள் புகழாரம்

டசென்னை மக்களுக்கு இலவசமாக சேவை புரிந்து வந்த மருத்துவர் பார்த்தசாரதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார்.

கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் பார்த்தசாரதி சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று காலை மரணமடைந்துள்ளார்.

வடசென்னைப் பகுதியான பழையவண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வந்த மருத்துவர் பார்த்தசாரதிக்கு தற்போது வயது 84 ஆகும்.

கொரோனாவில் மீண்டவர்களுக்கு அதிகரித்து வரும் மைகோர்மைகோசிஸ் நோய் – தொற்றுநோயாக அறிவித்த ராஜஸ்தான் அரசு

மேலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருந்த அவருக்கு, ஆக்சிஜன் அளவு பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் உயிரிழந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் அரண்செய்யிடம் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் பார்த்தசாரதி, வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர் என்றும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரிந்துவந்தபோதே மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்ததாகவும், பணி ஓய்வு பெற்றபின்னர் முழுநேரமாக மக்களுக்காக உழைத்ததாகவும் அந்த பகுதி மக்கள் அரண்செய்யிடம் கூறியுள்ளார்.

ஒன்றிய அரசை விமர்சிக்கும் சர்வதேச ஊடகங்கள் – இந்தியாவின் கருத்தை தெரிவிக்க பன்னாட்டு தொலைக்காட்சி தொடங்க தூர்தர்ஷன் திட்டம்

மேலும்,  60 பைசாவுக்கு மக்களுக்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கிய அவர், தற்போது 50 ரூபாய் கட்டணமாக பெற்று வருவதாகவும், ஆனால் மருத்துவக்கட்டணம் செலுத்த வழியற்ற மக்களுக்கும், சீருடையில் வரும் மாணவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வந்ததாகவும் அந்த பகுதி மக்கள் மருத்துவர் பார்த்தசாரதி குறித்த தன்னுடைய நினைவுகளை அரண்செய்யிடம் பகிர்ந்துகொண்டனர்.

அதுமட்டுமல்லாது, அவரது மருந்தகத்தில் மற்ற மருந்தகங்களில் விற்கப்பட்டதை விட மிகக் குறைந்த விலைக்கு மருந்துகள் விற்கப்படுவதாகவும், நான்கு தலைமுறையைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் பார்த்து வந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்