Aran Sei

நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி 818 செவிலியர்கள் பணிநீக்கம் – எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி 818 செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. பெருந்தொற்று காலத்தில் முன்களப் பணியாளர்களாக போற்றப்பட்டவர்களை அரசே போய் வாருங்கள் என தூக்கி வீசுவது ஏற்புடையதல்ல என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று முதல் அலை மற்றும் இரண்டாம் அலையின் போது, பொது மருத்துவ பணியாளர் தேர்வாணைய (எம்.ஆர்.பி) தேர்வு எழுதி, தகுதியின் அடிப்படையில் பணியில் சேர்ந்த செவிலியர்களில், 818 செவிலியர்களை நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி தமிழ்நாடு அரசு பணிநீக்கம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்த எதிர்க்கட்சிகள் – மக்களவையிலிருந்து வெளிநடப்பு

இந்நிலையில் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களை, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி காவல்துறை கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்ட செவிலியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலக்கட்டத்திலேயே தேர்வு மூலம், தகுதியின் அடிப்படையில் தான் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி செய்து வந்தனர். உயிரைப்பணயம் வைத்து அவர்கள் உழைத்ததன் பலன் தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் அனைவரும் அச்சத்துடன் இருந்த வேளையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் முன்களப் பணியாளர்களாக செயல்பட்டவர்களில் முக்கியமானவர்கள் இவர்கள்.  பெருந்தொற்று காலத்தில் அவர்களின் பணி என்பது மிகவும் அசாதாரணமானது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் போற்றப்பட வேண்டியவர்களாக அரசால் சுட்டிக்காட்டப்பட்டவர்களை இன்று அந்த அரசே நிதிப் பற்றாக்குறையை காரணங்காட்டி போய் வாருங்கள் என தூக்கி வீசுவதும், அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதும் உள்ளபடியே வேதனை அளிக்கின்றது.

தமிழ்நாடு: 800 செவிலியர்கள் பணிநீக்கம் – மீண்டும் பணி வழங்கக் கோரி போராடியவர்களை கைது செய்த காவல்துறை

ஆகவே, பணி நீக்கம் செய்யப்பட்ட 818 செவிலியர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்து அவர்களை மீண்டும் பணி அமர்த்துவதோடு, கொரோனா முன்களப் பணியாளர்களான அவர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்களை நிரந்தரமாக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**************************    *****************************       *****************************************

வன்னியர்களுக்கான 10.5 % இட ஒதுக்கீடு ரத்து குறித்து வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி நேர்காணல்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்