Aran Sei

தமிழ்நாடு: 800 செவிலியர்கள் பணிநீக்கம் – மீண்டும் பணி வழங்கக் கோரி போராடியவர்களை கைது செய்த காவல்துறை

மிழ்நாட்டில் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி மார்ச் 31 ஆம் தேதி 800 செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று (மார்ச் 4) பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் மீண்டும் பணிவழங்க கோரி தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகம் மற்றும் சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்களைப் பணி நீக்கம் செய்யக் கூடாது’ – தமிழ்நாடு அரசுக்கு வேல்முருகன் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று முதல் அலை மற்றும் இரண்டாம் அலையின் பொது மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (எம்.ஆர்.பி) தேர்வு எழுதி பணியில் சேர்ந்த 818 செவிலியர்களை நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி தமிழ்நாடு அரசு பணிநீக்கம் செய்துள்ளது. இதனையடுத்து போராடிய செவிலியர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

மார்ச் 8 ஆம் தேதி 2400 செவிலியர்கள் நிரந்தர ஒப்பந்த செவிலியர்களாக பணியமர்த்தப்படுவர் எனவும் மீதமுள்ள 800 செவிலியர்களை எதிர்காலத்தில் காலிப்பணியிடங்களுக்கு ஏற்றவாறு பணியமர்த்தப்படுவார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

ஒன்றிணைந்த 2000 செவிலியர்கள்: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னையில் போராட்டம்

மார்ச் 30 ஆம் தேதி 3200 க்கும் மேற்பட்ட எம்.ஆர்.பி செவிலியர்களில் 2400 க்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு மட்டுமே பணி நீட்டிப்பு ஆணையைத் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி 800 க்கும் மேற்பட்ட செவிலியர்களை பணியில் இருந்து கடந்த மார்ச் 31 ஆம் தேதியுடன் விடுவித்துள்ளனர்.

இன்று (மார்ச் 4) மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று கோரி, தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 500 செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, செவிலியர்களை கைது செய்து சமுதாய நலக்கூடத்தில் காவல்துறை அடைத்து வைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து 100 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்கள் அருகில் போராட முயன்றபோது அவர்களையும் காவல் துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ளனர். இவர்களைத் திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு சமுதாய நலக்கூடங்களில் அடைத்து வைத்துள்ளனர்.

ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் – தமிழக அரசு அறிவிப்பு

கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக வெறும் 14,000 சம்பளத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், பிடித்தம் செய்யப்பட்ட ஈ.எஸ்.ஐ, பி.எப் தொகையைக் கூட இதுவரை தரவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.

பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். பணிநிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து செவிலியர்கள் போராடி வருகின்றனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்