Aran Sei

சூரப்பா எங்கு சென்றாலும் நோட்டீஸ் அனுப்பப்படும் – விசாரணை ஆணையம் அறிவிப்பு

ண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று சூரப்பா எங்குச் சென்றாலும் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபடும் என சூரப்பா மீதான புகார்களை விசாரிக்கும் நீதிபதி கலையரசன் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சூரப்பா நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி நியமனம், பதவி உயர்வு போன்றவற்றில் 200 கோடி ரூபாய்க்கு ஊழல்கள் நடைபெற்று இருப்பதாக புகார்கள் எழுந்தன .

பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்குத் தாரை வார்க்க முயன்றது, எம்.டெக்., படிப்பை இல்லாமல் செய்து, 69% இட ஒதுக்கீட்டை நடைமுறைபடுத்த தவறியது. விதிமுறையை மீறி அவரது மகளுக்குப் பணி நியமனம் வழங்கியது என சூரப்பா மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.

கொரோனாவை தடுக்க ரெம்தேசிவிர் மருந்தின் தேவை அதிகரிப்பு – ஏற்றுமதியை தடை செய்த மத்திய அரசு

இதைத் தொடர்ந்து சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரச#Surappaன் தலைமையிலான ஆணையம் ஒன்றை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது.

சூரப்பாவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், சூரப்பா மீதான புகார்கள் தொடர்பாக 80 விழுக்காடு விசாரணை நிறைவு பெற்றிருப்பதாகவும், இன்னும் இரண்டு மூன்று பேரிடம் மட்டுமே இறுதிகட்ட விசாரணை நடத்தப்படவுள்ளது என கலையரன் குழு தெரிவித்துள்ளது.

இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து சென்ற அதிகாரிகள் – விசாரணைக்கு ஆஜராகும் சம்மனை திரும்ப பெற்ற காவல்துறை

விசாரணை முடிவுகளை வைத்துக் குற்றச்சாட்டுகளைத் தொகுத்து சூரப்பாவிடம் விசாரணை நடத்தபட்டும். அதற்கு அவர் நேரடியாவோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ பதிலளிக்கலாமென அக்குழு கூறியுள்ளது.

மேலும், சூரப்பா எங்குச் சென்றாலும் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அதற்கு அவர் பதிலளிக்காத பட்சத்தில் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.

Source : Puthiyathalaimurai

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்