Aran Sei

787 ராணுவ வீரர்கள் தற்கொலை: மனஅழுத்தத்தை குறைக்க 23 மனவள மையங்கள் – மத்திய அரசு தகவல்

2014 ஆண்டிலிருந்து தற்போது வரை 787 ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், அதில் அதிகபட்சமாக 591 தரைப்படை ராணுவ வீரர்கள் தற்கொலைக் செய்து கொண்டுள்ளதாகவும், மத்திய அரசு தெரிவித்துள்ளதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பதிலளித்துள்ள பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபட் நாயக், ராணுவ வீரர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் 18 தரைப்படை வீரர்களும் , 2 விமானப்படை வீரர்களும் மரணித்துள்ளார்கள் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்கள் எதிரிகளால் உயிரிழந்ததை விட, மன அழுத்தத்தால் உயிரிழந்ததே அதிகம் – ஆய்வு முடிவு

2014-2021 ஆண்டு காலத்தில் மொத்தமாக 787 ராணுவ வீரர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், அதில் 591 தரைப்படை வீரர்களும்,160 விமானப்படை வீரர்களும் ,36 கப்பற்படை வீரர்களும் அடங்கும் என மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபட் நாயக் தெரிவித்துள்ளதாக எக்னாமிக் டைம்ஸ் செய்தி கூறுகிறது.

விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடும் இராணுவ வீரர்கள் – புலனாய்வு அமைப்புகள் விசாரணை

மேலும், ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை குறைப்பதற்கு 23 மனவள மையங்கள் செயல்படுவதாகவும் , அங்குத் தகுதி வாய்ந்த மனநல மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்கள் இறந்தபோது எதிர்கட்சிகள் அரசியல் செய்தன – மோடி குற்றச்சாட்டு

இதே போல விமானப் படையில் ‘மிஷன் ஜிந்தகி’ வழியாகவும் , கப்பற்படையில் உள்ள 6 மனவள மையங்கள் வழியாகவும் வீரர்களுக்கு ஏற்படும் மனஅழுத்ததத்தை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று இணை அமைச்சர் ஸ்ரீபட் நாயக் கூறியுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்