Aran Sei

மார்ச் மாத ஊரடங்கால் 75 லட்சம் வேலை இழப்புகள் – இன்னுமொரு பொதுமுடக்கத்தை தாங்குமா இந்தியா?

கொரோனா பரவலைத் தடுக்க ஏப்ரல் மாதத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் சுமார் 75 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இரண்டாவது கொரோனா அலை ஏற்பட்டுள்ளதால்  கடுமையான பாதிப்புகள் உண்டாகியுள்ளன. இந்தியாவில் நேற்றைய தினம், 3,68,147 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,99,25,604  ஆக  உயர்ந்துள்ளது. இதுவரை, கொரோனா நோய்த்தொற்றால் 2,18,959 பேர் மரணமடைந்திருப்பதாகவும், நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால் 3,417  பேர் மரணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக முன்பே எச்சரிக்கப்பட்டது; மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை’ – சுப்பிரமணியன் சுவாமி

கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் டெல்லி, குஜராத், மகாராஷ்ட்ரா, உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு அளவுக்கதிகமானோர் பாதிக்கப்பட்டு மரணமடைந்ததால், பிணவறைகள் நிரம்பி வழியும் காட்சிகளைக் காண முடிகிறது.

இதனைத் தொடர்ந்து கொரோனா பரவலுக்கு தகுந்தவாறு கட்டுப்பாடுகளையும், ஊரடங்கையும் விதித்து கொள்ளுங்கள் என்று மத்திய அரசு மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டின் பல மாநிலங்களிலும் முழு ஊரடங்கு, கட்டுப்பாடுகளுடனான ஊரடங்கு நிலவுகிறது.

இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் சுமார் 75 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

பிஎம் கேர்ஸிற்கு நிதி அளிப்பதாக உறுதியளித்த ஆஸ்திரேலிய வீரர்: 37 லட்சத்தை யுனிசெப் அமைப்பிடம் வழங்கியுள்ளார்

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் இயக்குனர் மகேஷ் வயாஸ் கூறும்போது, “ஊரடங்கு காரணமாக மார்ச் மாதத்தை ஒப்பிடும்போது ஏப்ரல் மாதத்தில் 75 லட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து நாட்டின் வேலை இழப்பு சதவீதம் 7.97 -ஐ தொட்டுள்ளது. இதுவே நகர்ப்புறங்களில் 9.78 சதவீதமாகவும், கிராமப்புற வேலையின்மை 7.13 சதவீதமாகவும் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மார்ச் மாதத்தில் நாட்டின் வேலையின்மை சதவீதம் 6.50 விழுக்காடாக இருந்தது. இந்த நிலையில் ஒரு மாதத்தில் 7.97 விழுக்காடாக  அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரிப்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் ஒவ்வொரு நாளும் வேலையிழப்பு அதிகரிப்பதை நான் பார்க்கிறேன். வேலை இழப்பு ஒருபக்கம் அதிகரித்து வரும் சூழலில் தொழிலாளர் பங்களிப்பு வீதமும் குறைந்து வருகிறது. இது மிகவும் ஆபத்தானது” என்று அவர் கூறியுள்ளார்.

எங்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள் மோடி? – எழுத்தாளர் க.பொன்ராஜ்

தினமும் 4 லட்சம் கொரோனா தொற்றுகளையும் 3000 மரணங்களையும் எதிர்கொண்டு வரும் வருகிறோம். பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்பதால் உரடங்கை கடைசி தீர்வாக கைக்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு பிரதமர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Source: financialexpress

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்