Aran Sei

கொடைக்கானல் வனப்பகுதியில் ஆயுதப் பயிற்சி – மாவோயிஸ்டுகள் என குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை

கொடைக்கானல் வனப்பகுதியில், துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்ட மாவோயிஸ்ட்டுகள் என்று, குற்றச்சாட்டப்பட்ட 7 பேரை, திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்  புல்லாவெளி வனப்பகுதியில், கடந்த 2008 ஆம் ஆண்டு, மாவேஸ்டுகள் பதுங்கி இருந்து, துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக  சிறப்பு அதிரடிப்படை காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து, அங்கே சென்ற சிறப்பு அதிரடி படையினருக்கும் பதுங்கியிருந்தவர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் நவீன் பிரசாத் என்பவர் சுட்டக்கொல்லப்பட்டார்.

மாவோயிஸ்ட் கொலை : ’போலி எண்கவுண்டர் என சந்தேகமாகவுள்ளது’-குடும்பத்தினர்

இதில், கண்ணன், காளிதாஸ் , பகத்சிங், ரீனாஜாய்ஸ் மேரி, செண்பகவல்லி,ரஞ்சித், நீலமேகம் ஆகிய ஏழு  பேர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கொடைக்கானல் காவல்துறையினர், இந்திய வெடிமருந்து சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகைள் தடுப்பு சட்டம் உட்பட 16 சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து, தப்பிச் சென்றதாக கூறப்பட்ட 7 பேரை வெவ்வேறு இடங்களில் 7 காவல்துறையினர் கைது செய்தனர் . இது தொடர்பான வழக்கு,  திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் 300 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

’மாவோயிஸ்ட்’ வழக்கில் ஜாமீன். போராடுவது தேச துரோகமாகாது – கேரள நீதிமன்றம்

இவ்வழக்கில் தொடர்புடைய ரஞ்சித், நீலமேகம் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், மற்றவர்கள் பல்வேறு சிறைகளில் உள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக,  67 சாட்சியங்களில் 44 பேர் மட்டுமே சாட்சி அளித்துள்ளனர்.  இதில், தமிழக முன்னாள் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி, சாட்சி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

`பழங்குடியின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தால் மாவோயிஸ்டா?’ – பள்ளி ஆசிரியைக் கைது

இந்த வழக்கில், ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் என 210 சான்று பொருட்கள் மற்றும் 33 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த வழக்கை, மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி ஜமுனா, விசாரணை நடத்தி வந்தார். கடந்த மாதம் 15 ஆம் தேதி வழக்கு விசாரணை நிறைவடைந்தது.

இதனையடுத்து தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, வேலூர் சிறைச்சாலையில் இருந்த ரீனா ஜாஸ்மேரி பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். மேலும், ஜாமினில் வெளியே இருந்த ரஞ்சித், நீலமேகம் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். மீதமுள்ள நான்கு பேர் காணொளி காட்சி மூலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

“நக்சலைட்டுகள் என்ற பெயரில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்” – சத்தீஸ்கர் முதல்வர்

அப்போது, தீர்ப்பை வாசித்த, நீதிபதி ஜமுனா, “குற்றவாளிகள் மீது அரசு தரப்பிலிருந்து முறையாக குற்றம்  நிரூபிக்கப்படாத காரணத்தினால், சந்தேகத்தின் பலனை  குற்றவாளிகளுக்கு அளித்து, 7 பேரையும் விடுதலை செய்யப்படுகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்