Aran Sei

இன்று இந்தியாவில் ஏறத்தாழ 60,000 குழந்தைகள் பிறக்கும் – யுனிசெஃப்

Image Credits: India TV

புத்தாண்டு தினத்தில், இந்தியாவில் கிட்டத்தட்ட 60,000 குழந்தைகளும், உலகளவில் மொத்தம் 3.7 கோடி குழந்தைகளும் பிறக்கும் என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) எதிர்பார்க்கிறது.

2021-ம் ஆண்டின் முதல் குழந்தை பசிபிக் பகுதியில் உள்ள பிஜி நாட்டிலும், கடைசி குழந்தை அமெரிக்காவிலும் பிறகும்.

ராஜஸ்தான் – சாதிய பயங்களால் கல்வியை இழக்கும் பெண் குழந்தைகள்

உலகளவில், இந்தப் பிறப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை 10 நாடுகளில் நடக்கும் என்று கணிக்கப்படுகிறது – இந்தியா (59,995), சீனா (35,615), நைஜீரியா (21,439), பாகிஸ்தான் (14,161), இந்தோனேசியா (12,336), எத்தியோப்பியா (12,006), அமெரிக்கா (10,312), எகிப்து (9,455), பங்களாதேஷ் (9,236) மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு (8,640) என யுனிசெஃப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், 2021-ம் ஆண்டில் 14 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் சராசரி ஆயுட்காலம் 84 ஆண்டுகள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்திய குழந்தைகளின் ஆயுட்காலம் 80.9 ஆண்டுகள் ஆகும்.

’50 சதவீத இந்தியர்களுக்கு நீரிழிவு நோய் வரலாம்’ – ஆய்வு அறிக்கையில் தகவல்

“குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதில் ஏற்பட்ட முன்னேற்றத்தைத் தக்க வைக்க வேண்டும் என்றல், தொற்றுநோயின் குறித்த புரிதலும் அதற்கான தீர்வும் நிமிடம் இருக்க வேண்டும். நெருக்கடி நேரத்தில் மட்டுமல்லாமல், எப்போதும் மக்களைப் பாதுகாக்க கொள்கைகள் இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்தக் கொரோனா தொற்று நமக்குக் காட்டியுள்ளது. யுனிசெஃப் தனது ‘ரீமேஜின்’ (Reimagine) பிரச்சாரத்தின் கீழ், அரசுகள், தனியார் துறை நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் மற்றும் அனைத்து கூட்டாளர்களும் கைகோர்த்து ஒரு சிறந்த உலகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறது. ஒவ்வொரு குழந்தையின் உயிர்வாழ்வதற்கும் உள்ள உரிமையை உறுதிப்படுத்தவும், ஊக்குவிக்கவும் கேட்டுக்கொள்கிறது” என்று யுனிசெப் இந்தியாவின் பிரதிநிதி யாஸ்மின் அலி ஹக் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்