அசாம் மாநிலம் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்தில், அசாம்-நாகாலாந்து எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஆறு திமாசா தேசிய விடுதலைப் படை (டிஎன்எல்ஏ) போராளிகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய மேற்கு கார்பி அங்லாங் மாவட்ட காவல்துறை அதிகாரி, “மாவட்ட காவல் ஆணையர் பிரகாஷ் சோனோவால் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் அஸ்ஸாம் பாதுகாப்புப் படை இணைந்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினருக்கும் போராளிகளுக்கும் இடையில் நடைபெற்ற தாக்குதலில், திமாசா தேசிய விடுதலை படையை சேர்ந்த 6 உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.” என்று கூறியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, திமாசா தேசிய விடுதலை படையானது, அசாமில் உள்ள பழங்குடியின மக்களுக்கு ஒரு சுதந்திரமான தேசத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. நைசோடாவோ திமாசா இந்த அமைப்பின் தலைவராகவும், கர்மிந்தாவ் திமாசா உள்துறை செயலாளராகவும் உள்ளார்.
source; ndtv
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.