Aran Sei

மியான்மரில் 6 ஊடகவியலாளர்கள் கைது – பொது ஒழுங்கு சட்டத்தை மீறியதாக ராணுவம் குற்றச்சாட்டு

மியான்மரில் அசோசியேட் பிரஸ் (AP) நிறுவனத்தை சேர்ந்த ஊகடவியலாளர் தீன் ஸாவ் மற்றும் பிற ஊடகங்களை சேர்ந்த 5 பேர், பொது ஒழுங்கு சட்டத்தை மீறியதாதக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 3 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.

ஆங் சாங் சூ கியின் ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றியுள்ள ராணுவம் தொடர்பான செய்திகளை மூடிமறைக்கும் விதமாக, இந்த 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

‘பாஜக, உயர்சாதி இந்துக்களுக்கான கட்சி’ எனக் கூறும் ஆய்வறிக்கை – எதிர்ப்பு தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி

பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துதல், தெரிந்தே பொய்யான செய்திகளைப் பரப்புதல் அல்லது அரசாங்க ஊழியருக்கு எதிரான கிரிமினல் குற்றத்திற்கு எதிராக, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ போராடும் எவரையும் தண்டிக்கும் ஒரு சட்டத்தின் கீழ், இந்த 6 பேரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தீன் ஸாவின் வழக்கறிஞர் டின் ஸார் ஓ கூறியுள்ளார்.

கடந்த மாதம், ஆட்சிக்குழுவால் இந்தச் சட்டத்தின் வரம்பை விரிவுபடுத்து விதமாக, அதிகபட்ச சிறைத் தண்டனையை, இரண்டு ஆண்டுகளிலிருந்து அதிகரிக்கும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி – கலவரம் நடைபெற்ற வார்டை கைப்பற்றிய காங்கிரஸ்

தீன் ஸாவை உடனடியாக விடுதலை செய்யுமாறு அசோசியேட் பிரஸ் ஊடக நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

“மியான்மர் அதிகாரிகள் அனைத்து ஊடகவியலாளர்களையும் சிறையில் அடைத்து விடுவதோடு, ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மறைக்கும் பணிகளை செய்வதற்காக, செய்தியாளர்களை அச்சுறுத்துவதையும் துன்புறுத்துவதையும் நிறுத்த வேண்டும்” என்று ஊடகலவியலாளர்களை பாதுகாக்கும் குழுவின் தென்கிழக்கு ஆசியா மூத்த பிரதிநிதி ஷான் கிறிஸ்பின் கூறியுள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்