Aran Sei

கொரோனாவால் அனாதைகளான 577 குழந்தைகள் – ஒன்றிய அரசு தகவல்

Representational image

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக 577 குழந்தைகள், அனாதைகள் ஆகியுள்ளதாக ஒன்றிய அரசு கண்டறிந்துள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இந்தக் குழந்தைகளை அரசு கண்காணிப்பிலும், பாதுகாப்பிலும் வைத்துள்ளதாகவும், இந்தத் தகவல்கள் மாநில அரசிடமிருந்து பெறப்பட்டது என்றும், இந்தக் குழந்தைகளுக்கு நிறுவனங்களின் அரவணைப்பு வேண்டுமா (அ)அவர்களுக்கு உடனடி குடும்பங்களின் அரவணைப்பு வேண்டுமா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

‘பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களுக்கு பிறந்த குழந்தைகள் நாடு திரும்பலாம்’ – இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தம்

அதுமட்டுமல்லாது, குழந்தைகள் குடும்ப கட்டமைப்பிலிருந்து விலகாமல் இருப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளுக்கு அரசு செய்துள்ள பணிகள்குறித்து தெரிவித்த அதிகாரிகள், “ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு 10 லட்சம் ஒதுக்கியுள்ளது. இது நிறுவனங்கள் அரவணைப்பில் இல்லாத குழந்தைகளின் பராமரிப்புக்கானதாகும். மாவட்ட நீதிபதிகள் குழந்தைகளின் பராமரிப்புக்காக இந்த நிதியை வழங்குவார்” என்று கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 31 குழந்தைகள் உட்பட 113 பாலஸ்தீனர்கள் மரணம் : தரைவழியாகவும் தாக்க இஸ்ரேல் திட்டம்

சமூக வலைத்தளங்களில் வரும் பெரும்பாலான குழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்த அழைப்புகள் போலியானவை என்றும், தொடர்பு கொள்வதற்கான எண்களும் பயன்பாட்டில் இல்லாதவை என்றும் குறிப்பிட்டுள்ளதாக தி இந்து கூறுகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்