Aran Sei

ஏப்ரல், மே மாதங்களில் மாநிலங்களுக்கு வழங்கப்படாத 55 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி தொகை – மாநிலங்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் தகவல்

மாநில அரசுகளுக்கு ஏப்ரல், மே மாதங்களில்  வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி தொகை 55 ஆயிரம் கோடி ரூபாய் வரி நிலுவையில் இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு வழங்கப்பட்ட மொத்த தொகையில் இது 68 விழுக்காடு ஆகும்.

மாநிலங்களவையில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சம்ஷீர் சிங் டுல்லோ எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய அரசின் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”பஞ்சாப் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு நிலுவை வைத்துள்ள ஜிஎஸ்டி தொகை மாநிலங்கள் வாரியாகவும் வருட வாரியாகவும் எவ்வளவு உள்ளது? கடந்த மூன்று நிதியாண்டுகளில் வழங்கப்பட்ட ஜிஎஸ்டி நிலுவைத் தொகை எவ்வளவு? மாநிலங்கள் மற்றும் வருட வாரியான விவரங்கள் என்ன? ஜிஎஸ்டி தொகை வழங்கப்பட்டது மற்றும் நிலவைத் தொகையில் ஏதேனும் முரண்பாடு உள்ளதா?. இருப்பின் அதன் விவரங்கள் குறித்த தகவல்கள் வேண்டுமென கேள்விகள் எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர், “கடந்த நிதியாண்டில் ரூ. 81,179 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த நிதியாண்டில் ஏப்ரல், மே மாதங்களில் ரூ. 55,345 கோடி நிலுவை வைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

கடந்த நான்கு நிதியாண்டுகளில் அனைத்து மாநிலங்ளுக்கு மொத்தமாக சேர்த்து ரூ. 3,88,908 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

கொரோனா பேரிடரால் மாநிலங்களுக்கு நிதி வருவாய் இல்லை என்பதால் மாநிலங்களுக்குத் தர வேண்டிய ஜி.எச்.டி வரி வருவாயை ஒன்றிய அரசு தரவேண்டுமென்று தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கேட்டது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்