Aran Sei

இலங்கை கடற்படையால் ஒரே நாளில் 54 தமிழக மீனவர்கள் கைது : படகுகளும், மீன்களும் பறிமுதல்

லங்கை வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் கோவிலன் கடற்பரப்பில் படகில் பயணித்த 14 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக மீனவர்களால் பிடிக்கப்பட்ட 1030 கிலோ கிராம் மீன்களையும் இலங்கை படையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்று இலங்கை கடற்படை கூறுகிறது.

மேலும், வடமேற்கு மாகணத்தில் உள்ள மன்னார் பேசாலை கடற்பரப்பில் வைத்து இரண்டு விசைப் படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 20 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை கடற்படையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

கச்சத்தீவருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள்: கைது செய்தது இலங்கை கடற்படை

அதேபோல, வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து இரண்டு படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 20 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் ஐந்து படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் அது தெரவிக்கிறது.

இவர்களோடு சேர்த்து நேற்று (மார்ச் 25) ஒரே நாளில் 54 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் முறையான கொரோனா பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்பட்டு, அந்தந்த பகுதி நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்