Aran Sei

போகி நெருப்பில் கொளுத்தப்பட்ட விவசாய சட்ட நகல்கள் – கைது செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்

போகி பண்டிக்கைக்கு கொளுத்தப்பட்ட நெருப்பில்  விவசாய சட்ட நகல்களை எரித்த, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை ஆந்திர மாநில காவல்துறை கைது செய்துள்ளது.

இன்று (ஜனவரி 13) ஆந்திர மாநிலம் அனந்தபுரில் உள்ள க்ளாக் டவர் சந்திப்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனந்தபுர் மாவட்ட செயலாளர் டி.ஜெகதிஷ் உட்பட அக்கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கூடி, விவசாய சட்டங்களை ரத்து செய்ய மறுக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியுள்ளனர் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் – சட்ட நகல்கள் எரிப்பு, “டெல்லி சலோ” பேரணி, பெண்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்

இதையடுத்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய சட்டங்களின் நகல்களை, போகி பண்டிக்கைக்கு கொளுத்தப்பட்ட தீயிலிட்டு எரித்துள்ளனர். அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த அனந்தபுர் நகர் காவல்துறையினர், அவர்களை கைது செய்து அனந்தபுர் நகர் காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

நன்றி : .thehindu.com

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனந்தபுர் மாவட்ட செயலாளர் டி.ஜெகதிஷ் தி இந்துவிடம் பேசும் போது, “இது பாஜகவுக்கு ஒரு பெரிய இழப்பாகும் (உச்ச நீதிமன்றத்தின் திர்ப்பு). மத்திய அரசிற்கும் மூன்று விவசாய சட்டங்களுக்கும் ஆதரவாக உள்ளவர்களை வைத்துக்கொண்டு, விவசாய சங்க தலைவர்களைப் மத்திய அரசுடன் பேச்சு வார்த்தைக்கு அழைப்பதன் வழியாக இந்தச் சட்டங்களை அமல்படுத்தவே பாஜக முயற்சிக்கிறது.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லி சட்டசபை சிறப்புக் கூட்டம் – விவசாய சட்டங்களைக் கிழித்து எறிந்த அரவிந்த் கெஜ்ரிவால்

மேலும், “விவசாயிகளின் பிரச்சனையைத் தீர்ப்பதிலும் அவர்களின் நலனுக்காக செயல்படுவதிலும் மத்திய அரசு தீவிரமாக இருந்தால், அதற்கு நடுநிலையானவர்களை நியமித்திருக்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் அம்சங்களையும் ஆராய வேண்டும். மாறாக, ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக அல்ல.” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனந்தபுர் மாவட்ட செயலாளர் டி.ஜெகதிஷ் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்