Aran Sei

மஹாராஷ்டிராவில் கடத்தி செல்லப்பட்ட பத்திரிகையாளர் – முன்விரோதம் காரணமாகக் கொலையா?-காவல்துறை விசாரணை

காராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டம் ராகுரி பகுதியில், வாரப் பத்திரிகையில் பணிபுரியும் பத்திரிகையாளர் மர்மநபர்களால்  கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

ராகுரி பகுதியில் செயல்படும் வாரப் பத்திரிகையில் பத்திரிகையாளர் ரோஹிதாஸ் தடிர் பணிபுரிந்து வருகிறார்.

தொழிற்சங்க செயல்பாட்டார் தாக்கப்பட்ட புகார் – காவல்துறை விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, கல்லூரி சாலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்கையில் மர்ம நபர்கள் சிலரால் கடத்தி செல்லப்பட்டார். இதுகுறித்து காவல் துறையிலும் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடத்தி செல்லப்பட்ட ரோஹிதாஸ் அதே பகுதியில் காயங்களோடு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ராகுரி பகுதியின் உதவி ஆய்வாளர் கணேஷ் ஷெல்கே தெரிவித்துள்ளார்.

கழுத்தறுத்து கொல்லப்பட்ட பத்திரிகையாளர் : குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்த பாகிஸ்தான் நீதிமன்றம்

மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், முன் விரோதம் காரணமாக ரோஹிதாஸ் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் உதவி ஆய்வாளர் கணேஷ் ஷெல்கே கூறியுள்ளார்.

பத்திரிகையாளர் ரோஹிதாஸ் தடிர் தகவல் அறியும் உரிமை சட்ட செயல்பாட்டாளராகவும் இயங்கி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்