உக்ரைனில் உள்ள லிவிவ் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவம் படிக்கும் மாணவர் முகமது ஜியாத், பிப்பிரவரி 25 அன்று, உக்ரைன்-போலந்து எல்லையில் உள்ள ஷெஹினிக்கு வந்துள்ளார். ஆனால், போலந்திற்குள் நுழைய அந்நாட்டு அரசு அனுமதி மறுத்ததால், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்குச் சிக்கித் தவித்து வருவதாக கூறியுள்ளார்.
இந்திய தூதரகம் உக்ரைனில் உள்ள மாணவர்களுக்கு உதவுவதாக உறுதியளித்த போதிலும், கடந்த 4 நாட்களாக எங்களுக்கு எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை என்று அம்மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவுக்கு அருகில் உள்ள சுமி நகரில் 480க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். சுமி ரஷ்ய எல்லையிலிருந்து 50 மைல் தொலைவில் தான் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான மாணவர்கள் சுமி மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர். துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடந்துக்கொண்டே இருப்பதால் அச்சத்துடனே வாழ்வதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
‘உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை ரஷ்ய அதிபரால்தான் காப்பாற்ற முடியும்’ -உக்ரைன் தூதர் கருத்து
“சுமி மாநில மருத்துவ பல்கலைக்கழக விடுதியில் சுமார் 480 இந்திய மாணவர்கள் இருக்கின்றனர். அவர்களில் 300க்கும் மேற்பட்டவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இவ்வளவு அதிகமாக இந்திய மாணவர்கள் சிக்கியுள்ள இந்த இடத்தில் பெரிதாக ஊடக வெளிச்சம் வரவில்லை. இந்திய அரசிடம் இருந்து நாங்கள் உடனடி உதவியை எதிர்பார்க்கிறோம்” என்று நான்காம் ஆண்டு மருத்துவ மாணவர் அஜித் கங்காதரன் கூறியுள்ளார்.
“இந்த பகுதியில் உள்ள உக்ரேனியர்கள் இப்போது தங்கள் தற்காப்புக்காகத் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் சுற்றித் திரிகின்றனர். மேலும் அவர்கள் பெட்ரோல் குண்டுகளையும் தயாரிக்கின்றனர்” என்று அஜித் கங்காதரன் தெரிவித்துள்ளார்.
மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரை 12 மணி நேர ஊரடங்கு உத்தரவு உக்ரைனில் அமலில் உள்ளது. சைரன் சத்தம் கேட்கும் போது மாணவர்கள் தங்கள் பாஸ்போர்ட், தேவையான ஆவணங்கள் மற்றும் உணவுகளுடன் தங்கள் விடுதியின் அடித்தளத்திற்கு செல்வதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
“பதுங்கு குழிகள் மனிதர்களின் கூட்டத்தாலும், தூசியாலும் நிரம்பியுள்ளன. இங்கே குளிர்காலம் நிலவுவதால் பதுங்கு குழிகளுக்குள் உறைபனிக்குக் கீழே வெப்பநிலை குறைகிறது” என்று ஒரு கேரள மாணவர் கூறியுள்ளார்.
பாகுபாடு காட்டும் உக்ரைனிய அதிகாரிகள் – இந்திய மாணவர்கள் குற்றச்சாட்டு
மாணவர்கள் பிஸ்கட் மற்றும் தின்பண்டங்களைத் தின்றே உயிர்வாழ்ந்து வருகின்றனர். அதுவும் வெறும் 2 நாட்களுக்கு மட்டும் இருப்பதாகவும், தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அஜித் கங்காதரன் கூறியுள்ளார்.
“இங்கிருந்து போலந்து எல்லையை அடைய, 1,200 கி.மீ.க்கும் மேல் பயணிக்க வேண்டும். சாலைகள் பல பகுதிகளில் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் படைகள் பாலங்களையும் அழித்துவிட்டன” என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
Source : newindianexpress
தொடர்புடைய பதிவுகள்:
உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 1
உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 2
உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 3
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.