கடந்தாண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில், குஜராத் மாநிலத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அலட்சியத்தாலும் விபத்துக்களாலும் கொல்லப்பட்டுள்ளனர் என்று குஜராத் அரசு அம்மாநில சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நேற்று (மார்ச் 16), இது தொடர்பாக, சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு, பாஜகவை சேர்ந்த அம்மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் திலீப் தாக்கோர் பதிலளித்துள்ளார்.
‘கொரோனா ஊரடங்கின் போது, மகாராஷ்ட்ராவில் 17 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு’ – மத்திய அரசு
அதில், கடந்த இரண்டு ஆண்டுகளில், மாநிலம் தழுவிய அளவில் பதிவாகியுள்ள 322 சம்பவங்களில் 421 தொழிலாளர்கள் அலட்சியத்தாலும் விபத்துக்களாலும் கொல்லப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏராளமான இரசாயன ஆலைகளைக் கொண்ட பாரூச் மாவட்டத்தில் 68 தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் சூரத்தில் 67, அகமதாபாத்தில் 61, மோர்பியில் 55, வல்சாட்டில் 38, கட்ச்ல் 29, வடோதரா மற்றும் ராஜ்கோட்டில் தலா 18 தொழிலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் திலீப் தாக்கோர் பட்டியலிட்டுள்ளார்.
’என்.எல்.சி விபத்தில் பலியான 20 தொழிலாளர்கள் – நிர்வாகமே காரணம்’ – பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு
இந்த இறப்புகள் தொடர்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளின் மீது 288 குற்றவியல் வழக்குகளை பதிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.