Aran Sei

‘இந்தியாவுக்கு ஒரு இஸ்லாமியர் பிரதமராக வந்தால் 40% இந்துக்கள் கொல்லப்படுவர்’ – சாமியார் யதி நரசிங்கானந்த் மீண்டும் வன்முறை பேச்சு

“இந்தியாவுக்கு ஒரு இஸ்லாமியர் பிரதமராக வந்தால் 40 விழுக்காடு இந்துக்கள் கொல்லப்படுவார்கள்” என்று ஹரித்வார் வெறுப்புப் பேச்சு வழக்கில் கைதாகி தற்போது பிணையில் இருக்கும்  இந்து சாமியார் யதி நரசிங்கானந்த்  மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

வடமேற்கு டெல்லியின் புராரி மைதானத்தில் இந்து மகாபஞ்சாயத்தில் உரையாற்றிய காசியாபாத் தஸ்னா தேவி கோவிலின் தலைவர் யதி நர்சிகானந்த், “இந்தியாவுக்கு ஒரு இஸ்லாமியர் பிரதமராக இருந்தால் 40 விழுக்காடு இந்துக்கள் கொல்லப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.

பெண்களை அவதூறு செய்த வழக்கு – சாமியார் யதி நரசிங்கானந்தை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

“இந்துக்கள் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக ஆயுதங்களை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். “இது இந்துக்களின் எதிர்காலம். நீங்கள் இதை மாற்ற விரும்பினால், நீங்கள் ஒரு மனிதனாக இருங்கள். ஒரு மனிதனாக இருப்பது என்ன? ஆயுதம் ஏந்திய ஒருவராக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் செய்தி சேகரிக்கச் சென்ற சில ஊடகவியலாளர்களை பார்வையாளர்கள் தாக்கியதாகவும்  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களில் சிலர் தங்களை டெல்லி காவல்துறை கைது செய்து முகர்ஜி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “பத்திரிகையாளர்களிடம் இருந்து பல புகார்களைப் பெற்றுள்ளோம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

ஹரித்வாரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு – யதி நரசிங்கானந்த் சரஸ்வதி மீது வழக்குப் பதிவு

பத்திரிகையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த வடமேற்கு காவல்துறை துணை ஆணையாளர் உஷா ரங்க்னானி“சில நிருபர்கள், அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காவல் துறை வாகனத்துல் அமர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக விருப்பத்துடன்தான் காவல் நிலையத்திற்குச் சென்றனர். யாரும் கைது செய்யப்படவில்லை.” என்று ட்விட் செய்துள்ளார்.

இதையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். “வன்முறையைத் தூண்டும் பேச்சுக்ளைப் பதிவு செய்துள்ளோம். நாங்கள் சிசிடிவி காட்சிகளை கொண்டு, சில பேச்சாளர்களை அடையாளம் கண்டுள்ளோம்,” என்று காவல்துறையில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி: ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் நிறுவனம் தகவல்

முன்னதாக, ஹரித்வாரிலும் டெல்லி ஜந்தர் மந்தரிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அதே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே இந்த மகாபஞ்சாயத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: newindianexpress

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்