Aran Sei

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஊதியம் வழங்குவதில் காலதாமதம் செய்யும் ஒன்றிய அரசு – 40% ஊதியம் வழங்கப்படாமல் உள்ளதாக தகவல்

காத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்தவர்களின் ஏப்ரல் மாதத்திற்கான மொத்த ஊதியத்தில் 14% ஊதியம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், மே மாத ஊதியத்தில் 60% ஊதியம் வழங்கப்படாமல் உள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திட்ட மேலாண்மை தகவல் மையத்தின் தகவலின் படி தமிழகத்தில் அதிகபட்சமாக ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்தவர்களின் ஊதியம் நிலுவையில் உள்ளதாக தெரிய வந்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஊதியம், தொழிலாளர், விவசாயிகள் உரிமைகள் – இமாச்சல பிரதேசத்தில் தொழிற்சங்க ஆர்ப்பாட்டம்

மேலும், ஊதியம் குறித்து தகவல்கள் இன்னும் பதிவேற்றப்படவில்லை என்று மாநில ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்தவர்களின் ஊதியம் இரண்டு நடைமுறைகளின் வழியாக வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக பணி புரிந்தவர்கள் தகவல்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டு பண பரிமாற்ற ஆணையை ஒன்றிய அரசுக்கு அனுப்பும் என்றும், அதன் பின்னர் ஒன்றிய அரசு சம்பந்தப்பட்டவர்களின் கணக்கில் பணத்தை வரவு வைக்கும் என்றும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதற்கட்ட செயல்பாட்டிற்கு 8 நாட்களும், இரண்டாம் கட்ட செயல்பாட்டிற்கு 7 நாட்களுக்குள் ஆகுமென்றும், ஆகமொத்தம் 15 நாட்களில் பணியாளர்கள் ஊதியத்தை எதிர்பார்க்கலாம்.

ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் – ஊதியம் அளிக்காமல் கொத்தடிமைகளாக நடத்தப்படும் தூய்மைப்பணியாளர்கள்

இந்நிலையில், ஊரக வேலைவாய்ப்பு திட்ட இணையதளத்தின் தகவலின் படி, கடந்த இரண்டாம் மாதம் பணிபுரிந்தவர்களின் 99% பண பரிமாற்ற ஆணையை மாநில அரசு முதற்கட்டமாக வழங்கியுள்ளதாகவும், இதன் வழியாக மாநில அரசு காலதாமதிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

மேலும், ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு மாநில அரசுகள் பண பரிமாற்ற ஆணை வழங்கிய, ஊதியத்தொகையான 6.4 கோடியில், 2.5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக அல்லது 40% ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும் தி இந்து செய்தி கூறுகிறது.

குறைந்தபட்ச ஊதியம் உயருமா? – கோடிகளில் ஊதியம் பெறும் அமெரிக்க தலைமை நிர்வாகிகள் மீது விமர்சனம்

இதுகுறித்து தெரிவித்துள்ள ஆசிம்பிரேம்ஜி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜேந்திர நாராயணன்,”15 நாட்களுக்கும் மேல் கால தாமதாக ஊதியம் வழங்குவது சட்டவிரோதமானது. மேலும், கடந்த மே 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற வழங்கியுள்ள தீர்ப்பிற்கு எதிரானது. எனவே, மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளதாக தி இந்து செய்தியில் தெரிவித்துள்ளது.

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்