Aran Sei

காவல் சித்தரவதைக்கு ஆளான இஸ்லாமியர்களுக்கு பி.எப்.ஐ சட்ட போராட்டத்தால்தான் நீதி கிடைத்தது’ – முஹம்மது சேக் அன்சாரி

துரையில் இஸ்லாமியர்களை சித்ரவதை செய்த காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தலா ஒரு இலட்சம் இழப்பீடு வழங்கவும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று மாநில தலைவர் M.முஹம்மது சேக் அன்சாரி தெரிவித்திள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடந்த மார்ச், 2011-ல் மதுரை RSS அலுவலகத்தில் மாட்டுத்தலை சில மர்மநபர்களால் வீசப்பட்டது. வழக்கம் போல அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் விசாரணை வளையத்தில் சிக்க வைக்கப்பட்டனர். மகபூப்பாளையத்தை சேர்ந்த அப்பாஸ், சாகுல்ஹமீது, ஷாஹின்ஷா, அல்ஹாஜ், ரபீக்ராஜா ஆகியோரை மதுரை தனிப்படையை சேர்ந்த சார்பு ஆய்வாளர்கள் பார்த்திபன், வெங்கட்ராமன், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் கணேசன், மோகன், தலைமைக்காவலர் சங்கர நாராயணன், காவலர் சித்திரை வேல் உட்பட காவல்துறையினரால் குடும்பத்தினருக்கு தெரியாமல் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு செல்லூர் காவல்நிலையத்தில் வைத்து குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்க சித்திரவதை செய்யப்பட்டனர். தொடர்ந்து லத்தியால் தாக்கியும், இரவு முழுவதும் உறங்கவிடாமல் சித்தரவதை செய்தும், நாள் முழுக்க குளிர்சாதன அறையில் ஆடையில்லாமல் நிற்க வைத்தும் துன்புறுத்தினர்.

மனித உரிமை செயல்பாட்டாளர் குர்ரம் பர்வேசு மீதுள்ள உபா வழக்கை திரும்பப் பெறுக – வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் கூட்டறிக்கை

இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வந்தது. மேலும், பிற மனித உரிமை அமைப்புகளும், கட்சிகளும் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுத்தது. போராட்டத்தின் விளைவாக சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டதின் பேரில் களம் இறங்கிய பாப்புலர் ஃப்ரண்ட் வழக்கறிஞர் குழுவினர் சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்தனர். மாநில மனித உரிமை ஆணையத்திற்கு அப்பாஸ், சாகுல்ஹமீது, ஷாஹின்ஷா, அல்ஹாஜ், ரபீக்ராஜா ஆகியோர் அனுப்பிய மனுக்களில் அப்பாஸின் மனு தவிர்த்து மற்ற மனுக்கள் தமிழக மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்றது.

அதே நேரத்தில் NCHRO அமைப்பு சார்பாக பேரா அ.மார்க்ஸ் தலைமையில் உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணை நடத்தி அரசுக்கு பரிந்துரைகள் வழங்கினர். உண்மை கண்டறியும் விசாரணைக் குழுவின் அறிக்கையும் ஒரு ஆவணமாக மனித உரிமை வழக்கில் தாக்கல் செய்யப்பட்டது.

‘தூய்மைப் பணியாளர்களை கண்ணியமான முறையில் நடத்துக’ – சென்னை மாநகராட்சிக்கு சிபிஎம் வேண்டுகோள்

பல ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தற்போது ஆறுதல் அளிக்கக்கூடிய வகையில் பாதிக்கப்பட்ட நால்வருக்கும் தலா ரூ.1 இலட்சம் வழங்கவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை. ஜெயசந்திரன் அவர்கள் தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளதை பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பதோடு, நீதிக்காக போராடிய அத்துணை கரங்களையும் மேலும், வலுப்படுத்தும் உத்தரவாக இது அமையும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் நம்புகிறது.

இந்த வழக்கினை மாநில மனித உரிமை ஆணையத்தில் திறம்பட நடத்திய மூத்த வழக்கறிஞர் திரு C.M. ஆறுமுகம், அவருடன் இணைந்து பணியாற்றிய வழக்கறிஞர்கள் சையது அப்துல் காதர், அப்பாஸ், நஜ்முதீன், ஷாஜஹான், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முகம்மது யூசுப், NCHRO உண்மை கண்டறியும் குழுவினர், போராட்டம் நடத்திய SDPI கட்சியினர், அப்போதைய மதுரை ஐக்கிய ஜமாத் தலைவர் நஜ்முதீன், செயலாளர் அப்துல் காதர் மற்றும் போராட்டங்கள் நடத்திய அனைத்து இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பினர் ஆகியோருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், இந்த நிகழ்வுகளுக்கு பிறகு மதுரையில் தொடர்ந்து நடந்த போலி வெடிக்காத குண்டு சம்பவங்களில் விசாரணை என்ற பெயரில் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டவர்களுக்கும் நீதியை பெற்றுத்தர அரசு துரிதமாக செயல்படவேண்டும்.

‘பாஜகவின் சர்வாதிகார ஆட்சியில் உத்தரபிரதேச மாநிலம் அச்சத்தில் வாழ்கிறது’ – சத்தீஸ்கர் முதலமைச்சர் கருத்து

மதுரை மாட்டுத்தலை வீசிய சம்பவ வழக்கில் உண்மை தன்மையை வெளி கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துவதோடு இவ்வழக்கில் தொடர்புள்ள காவல்துறை அதிகாரிகள் மீது காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக்கொள்வதாக  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் M.முஹம்மது சேக் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திள்ளார்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்