ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்குக் கொண்டுவர மத்திய அரசுக்கு நிபுணர் குழுப் பரிந்துரை அளித்துள்ளது.
இந்நிலையில், மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, நிபுணர் குழுவின் இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டால் இது இந்தியாவின் மூன்றாவது கொரனோ தடுப்பூசியாகும்.
இந்தியாவில் ‘கோவிஸ்ஷீல்டு’, ‘கோவாக்ஸின்’ ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது.
நாடு முழுவதும் கொரனோ இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வரும் நிலையில் நிபுணர் குழு இந்தப் பரிந்துரையை மேற்கொண்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி – மருத்துவக் காப்பீடுகளின் நிலை என்ன? : ஷியாம் ராம்பாபு
உலகிலேயே முதல்முறையாகப் அங்கீகரிக்கப்பட்ட கொரனோ தடுப்பூசி ஸ்புட்னிக் வி தடுப்பூசியாகும்.
இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பூசியை ரஷ்யாவிலிருந்து நேரடியான நிதி உதவி வழியாக டாக்டர்.ரெட்டிஸ் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்யவும், ஆய்வு மேற்கொள்ளவும் உள்ளது.
SOURCE; PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.