எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 20 பேர் உட்பட தமிழக மீனவர்கள் 39 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (மார்ச் 24) இரவு, இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 20 மீனவர்கள், 4 படகுகளில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். அதேநேரம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், 2 படகுகளிலும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் ஒரு படகிலும் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று (மார்ச் 25) இலங்கை எல்லை பகுதியில் உள்ள கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறி இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இக்கைதை மீன்வளத் துறையும் உறுதி செய்துள்ளது.
மறுபுறம், இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலை அருகே காரைக்கால் மீனவர்கள் ஐந்து பேரையும், கச்சத்தீவு அருகே தூத்துக்குடி மீனவர்கள் 14 பேரையும் சேர்த்து மொத்தம் 19 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும் மீன்வளத் துறை தெரிவித்துள்ளது.
‘பிடுங்கப்பட்ட தீவுகளை மீனவப் பழங்குடிகளிடம் திருப்பிக் கொடுங்கள்’ – ஜோ டி குரூஸ்
இவர்கள் அனைவரும் முறையான கொரோனா சோதனை செய்து தனிமைப்படுத்தப்பட்டு, அந்தந்த பகுதி நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.