Aran Sei

‘மதசார்பின்மைக் கொண்ட கட்சிகள் இஸ்லாமியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை’ – அசாதுதீன் ஒவைசி

credits : muslim village

தசார்பின்மைக் கொண்ட கட்சிகள்  இஸ்லாமியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை  என்று  எ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின்  தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளதாக தி நியூ இந்தியன்  எக்ஸ்பிரஸ் செய்தி  வெளியிட்டுள்ளது.

‘அரசின் அதிகார தாக்குதலில் ஆபத்தின் விளிம்பில் பேச்சுரிமை’ – மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கருத்து

ஐ.எஸ்.பி ஹைதராபாத் என்ற  அமைப்பு நடத்திய இணையவழிக் கூட்டத்தில்  பங்கேற்ற அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளதாக  அந்த  செய்தி  குறிப்பிடுகிறது.

மேலும், ஹரியானா மாநிலத்தில்  பசு வதைச் சட்டத்திற்கு  காங்கிரஸ் ஆதரவளித்ததையும், மகாராஷ்டிராவில்  சிவ சேனா கட்சி  குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு  ஆதரவளித்ததையும் பார்த்து,     பாஜகவுக்கும், இதர எதிர்கட்சிகளுக்கும்  வித்தியாசம்  தெரியாமல்  இந்தியர்கள் குழம்பியுள்ளதாகவும் அந்தக் கூட்டத்தில் அவர்  தெரிவித்துள்ளதாக  தி  நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தியில்  கூறப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் ஊராட்சிமன்ற உறுப்பினர்களை வாக்களிக்கவிடாமல் கடத்துவதற்கு  உதவிய ஐ.ஏ.எஸ் – படம்பிடித்த பத்திரிகையாளர் மீது தாக்குதல்

அதுமட்டுமல்லாது, இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் விமர்சகர் சஞ்சய பாரு, பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  வலுவான கருத்தியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்  என்று தெரிவித்துள்ளதாகவும்  அந்த  செய்தி  தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்