Aran Sei

பழங்குடிப் பெண்ணின் சடலத்தை வண்டியில் ஏற்ற மறுத்த மருத்துவமனை ஊழியர்கள்- இடைநீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவு

டிசா மாநிலம் புவனேஷ்வர் மாவட்டத்தில் உள்ள மோட்டிங்கியா கிராமத்தில் வசிக்கும் காந்த் பழங்குடியினத்தைச் சார்ந்தவர் பாலகிருஷ்ணா கன்ஹார். கடுமையான இரத்த சோகை மற்றும் சுவாசக் கோளாறால் அவதியுற்ற அவரின் மனைவியை கடந்த ஜூன் 29 அன்று மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். உடல்நிலை மோசமானதால ஜூலை 1 அன்று அவரின் மனைவி மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார். உரிழிந்தவரின் சடலத்தை வண்டிக்கு கொண்டு செல்ல  ​​மருத்துவமனையில் இருந்து யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.

இறந்த மனைவியின் உடலை இரண்டாவது மாடியிலிருந்து படிக்கட்டுகளின் வழியே இறக்கியுள்ளார். தரை தளத்திற்கு வந்தவுடன் ஒரு ஸ்ட்ரெச்சரைக் கண்டுபிடித்து, தனது மனைவியின் உடலை பிணம் ஏற்றும் வண்டிக்கு எடுத்துச் சென்றுள்ளார். வாகன ஓட்டுனரும் பிணத்தை வண்டியில் ஏற்ற உதவி செய்ய மறுத்துவிட்டார்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

பாலகிருஷ்ணாவின் இரண்டு வயது மகளை சுமந்து வந்த அவரது நோய்வாய்ப்பட்ட தந்தையின் உதவியை அவர் இறுதியாக நாட வேண்டியிருந்தது.  அவர்கள் குழந்தையை தரையில் இறக்கிவிட்டு,  உடலை வாகனத்தில் ஏற்றியுள்ளனர். இந்தக் காணொளி சமூகவலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

இந்த சம்பவம்குறித்து தெரிவித்த காந்தமால் தலைமை மாவட்ட மருத்துவ அதிகாரி ராஜஸ்ரீ பட்நாயக்” அந்தப் பெண்ணுக்கு கடுமையான இரத்த சோகை மற்றும் சுவாசக் கோளரால் அவதிப்பட்டார்.  இரத்தமாற்றமும் செய்யப்பட்டது.  மருத்துவர்களின் தீவிர முயற்சிகள் இருந்தபோதிலும் அப்பெண்ணை காப்பற்ற முடியவில்லை. இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும்போது மருத்துவமனை ஊழியர்கள் கன்காணிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

திரைப்பட தணிக்கை சட்ட (திருத்த) வரைவு மீதான மக்கள் கருத்து – திரைக்கலைஞர்கள் உள்ளிட்ட 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கையெழுத்து

மேலும், “மருத்துவமனை ஊழியர்கள் தங்கள் கடமையை செய்யாமல் இருந்தது கண்டறியப்பட்டது.  செவிலியர் உட்பட இரண்டு ஊழியர்களை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளோம்” என்று மருத்துவர் நாயக் கூறியுள்ளார்.

காந்தமால் குடிமக்கள் மன்றத்தின் தலைவர் அருப் ஜீனா கூறுகையில், “சில ஆண்டுகளுக்கு முன்பு காலஹந்தியில்  12 கி.மீ தூரத்திற்கு மனைவியின் உடலை தோளில் சுமந்த டானா மஜியின் சம்பவம்  நமக்கு நினைவூட்டுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகள் மீண்டும் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 

credit: the hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்