Aran Sei

மனிதஉரிமைகள் ஆணையத்தின் தலைவராக முன்னாள் நீதிபதி நியமனம் – மனிதஉரிமை செயல்பாட்டாளர்கள் கண்டனம்

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் குமார் மிஸ்ரா நியமிக்கப்பட்டதில் இந்திய ஒன்றிய அரசு பொதுக்கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று மனிதஉரிமை செயல்பாட்டாளர்கள் கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தொழிலாளர்கள் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தேசிய மனித உரிமைகள் ஆணையம்

மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக மிஸ்ராவை நியமித்த ஒன்றிய அரசின் முடிவு, ”திமிர்த்தமான இறுமாப்பான முடிவு மற்றும் பொதுக்கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை, ஜனநாயக விதிகள் மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் ஆகியவை புறக்கணிக்கப்பட்டுள்ளது” என்று மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறியுள்ளது.

மேலும், பிரதமர் மோடி தலைமையிலான ஆணையத்தின் தலைவர் தேர்வுக்குழுவில் உறுப்பினராக இடம்பெற்றிருந்த, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ஆணையத்தின் தலைவராக தலித், பழங்குடியினர் அல்லது சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும். இவர்களே அதிகளவில் பாதிப்படைந்திருக்கின்றனர். எனவே இவர்களை நியமிக்க வேண்டும்” என்று பரிந்துரைத்தையும் மனிதஉரிமை செயல்பாட்டாளர்கள் கூறியுள்ளதாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போபாலில் சிறை கைதிகளை என்கவுண்டர் செய்த சிறை நிர்வாகம் – நடவடிக்கை எடுக்காதது குறித்து பதிலளிக்க மனிதஉரிமைகள் ஆணையம் உத்தரவு

தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை நியமிப்பதன் முக்கியத்துவம் குறித்து தெரிவித்துள்ள அவர்கள்,”இது போன்ற பல சமூகங்கள் இன்று உணரும் அந்நியப்படுதல் மற்றும் விரக்தியின் உணர்வை மட்டுப்படுத்த உதவும், இந்தியாவில் அரசியலமைப்பு ஜனநாயகம் குறித்து அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும் இது பெரிதும் உதவும்” என்று தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

சிறையிலிருந்து போட்டியிட்ட மனித உரிமை செயல்பாட்டாளர் அகில் கோகோய் – பாஜகவை எதிர்த்து பெரும்வெற்றி

மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் குழுவில், மக்கள் உரிமைகள் குழுவின் தலைவர் ரவிக்கிரண் ஜெயின், உச்சநீதிமன்ற நீதிபதி விரிந்தா க்ரோவ்ர், செயல்பாட்டாளர் ஹரிஷ் மந்தர், திட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினர் சயீத் ஹமீது ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி மிஸ்ரா நியமனம் குறித்து தெரிவித்துள்ள மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள், “2020 ஜனவரி 20 அன்று 24 நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் பங்கேற்ற மாநாட்டில், பிரதமர் மோடிக்கு தனது விசுவாசத்தை காட்டியதற்காக வெகுமதி அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்