Aran Sei

பழங்குடியினர் உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமியை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் – மகாராஷ்டிரா முதல்வருக்கு ஜார்கண்ட செயல்பாட்டாளர்கள் கடிதம்

ழங்குடியினர் உரிமைகள் ஆர்வலர் ஸ்டான் சுவாமியை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என ஜார்கண்ட மாநிலத்தைச் சேர்ந்த மாநில மக்கள் அமைப்புகள் மற்றும் செயல்பாட்டாளர்களின் கூட்டமைப்பான ஜார்கண்ட் ஜனாதிகார் மகாசபை வலியுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் திலீப் வாலீஸ் பாட்டீல் ஆகியோருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், இதனை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கடிதத்தில், ”பார்கின்சன் நோயாளியால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் ஸ்டான் சுவாமிக்கு, டீ அருந்துவது, குளிப்பது மற்றும் துணி துவைப்பது போன்ற பணிகளை மேற்கொள்வதில் சிரமம் உள்ளது. அவருக்குச் செவித்திறன் குறைபாடு உள்ளதால் அதற்குச் சிகிச்சை தேவைப்படுகிறது. இதுவரை குடலிறக்கத்திற்காக அவருக்கு இரு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்மா சிகிச்சை அறிவியல் பூர்வமற்ற முறையென ஆய்வாளர்கள் கடிதம் – கொரோனா நெறிமுறையிலிருந்து நீக்கம் செய்ய முடிவு

எல்கர் பரிஷத் கலவரம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்டார்.

“மே 14 ஆம் தேதி தனது நண்பரைத் தொலைபேசியில் அழைத்த ஸ்டான் சுவாமி, தனது உடல்நிலை சரியில்லை என்பதை தெரிவித்துள்ளார். அவரால் தொலைபேசி பேச முடியாத அளவிற்கு பலவீனமடைந்துள்ளார். அவரது உடல்நிலையை சீர்செய்வதில் மருந்துகள் பலனளிக்கவில்லை. அவருக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவில்லை. தடுப்பூசியின் முதல் டோஸ் கூட இன்னும் செலுத்தப்படவில்லை” என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு ஸ்டான் சுவாமியை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.மேலும், ‘ஹோலி பேமிலி’ அல்லது ஹோலி ஸ்பிரிட் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டால் அவரது சகாக்கள் அவரைக் கவனித்து கொள்ள வசதியாக இருக்கும் என ஜார்கண்ட் ஜனாதிகார் மகாசபை கேட்டுக் கொண்டுள்ளது.

Source : The Wire

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்