கடந்த டிசம்பர் 2020 வரை குஜராத்தை சேர்ந்த 345 மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கச்சத்தீவருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள்: கைது செய்தது இலங்கை கடற்படை
குஜராத் சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள அம்மாநில அரசு, மீனவர்குறித்த இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சிறையில் கைது செய்யப்பட்டுள்ள 345 மீனவர்களில் 248 பேர் கடந்த இரண்டு வருடங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறியுள்ளது.
மேலும், சிறையில் உள்ள 345 மீனவர்களில் 63 பேர் ஒரு வருடத்திற்கு மேலாகவும் 21 பேர் 3 வருடத்திற்கு மேலாகவும், ஒரு மீனவர் ஐந்து வருடத்திற்கு மேலாகச் சிறையில் உள்ளதாகக் குஜராத் அரசு தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தி தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையால் ஒரே நாளில் 54 தமிழக மீனவர்கள் கைது : படகுகளும், மீன்களும் பறிமுதல்
ஆழ்கடல் மீன்பிடித்தலின்போது சர்வதேச எல்லையைக் கடந்தவர்கள் பாகிஸ்தான் பாதுகாப்புப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப் பட்டுவருவதாகவும் குஜராத் அரசு அறிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.