Aran Sei

நாட்டில் அசாதாரண சூழல் நிலவுவதாய் பொய் பரப்பும் பிரிவினைவாதிகள் – ஆர்.எஸ்.எஸ் குற்றச்சாட்டு

கொரோனா இரண்டாம் அலைபரவும் சூழலில் பிரிவினைவாதிகளும், தேசவிரோதிகளும் இந்த நாட்டின்மீது நம்பிக்கையின்மையும், அசாதாரண சூழல் நிலவுவது போன்றும் திட்டமிட்டே பரப்பி வருவதிலிருந்து மக்கள் கவனமாக இருக்க வேண்டுமென ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாதரேயா, ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள், சமூக மற்றும் மதநிறுவனங்களைச் சார்ந்தவர்கள் இந்தப் பிரச்சனையைச் சரிசெய்ய முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை பரவலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் – எண்ணிக்கையை குறைத்து காட்டும் நிர்வாகம்

கொரோனா இரண்டாம் அலையில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பலமாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, இந்தச் சூழலைத் தேசவிரோதிகளும், பிரிவினைவாதிகளும் பயன்படுத்திக்கொண்டு நாட்டின்மீது ஏதிர்மறை தோற்றத்தையும், நம்பிக்கையின்மையையும் உண்டாக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆக்ஸிஜன் தாருங்கள் நன்றியோடு இருப்பேன் – அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்

மேலும், “இந்த நாட்டுமக்கள் இந்தசூழலை கட்டுபடுத்த முயன்றுவரும் நிலை இது போன்று பிரிவினைவாதிகள் உருவாக்கும் சர்ச்சைகளிலிருந்து கவனமாக இருக்க வேண்டும். இந்துத்துவ அமைப்பினரும் இந்தச் சமூகத்தின் மீது நம்பிக்கையும், பற்றும ஏற்படுமாறு செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது, திடீரென மோசமான சூழல் ஏற்பட்டதால் மக்கள் படுக்கை, மருத்துவ வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் தட்டுபாடு நிலவுவதாகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் தத்ததாரேயா தெரிவித்துள்ளார்.

Source: The new indian express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்