Aran Sei

‘பட்டரின் மட்டன் கறி’ படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த பார்ப்பனர் சங்கம், சுப்ரமணிய ஸ்வாமி – நடவடிக்கை எடுக்கப்படுமென மத்திய அமைச்சர் உறுதி

கேரளாவில் ‘பட்டருடே மட்டன் கறி’ என்ற திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணிய ஸ்வாமி அனுப்பிய கடிதத்திற்கு மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவுடேகர் பதிலளித்துள்ளார்.

ஓடிடி தளங்களை அரசு தணிக்கை செய்யாது – சுயத்தணிக்கை செய்ய நிறுவனங்களுக்கு மத்திய அரசு கோரிக்கை

இதுகுறித்து பிரகாஷ் ஜவுடேகர் அனுப்பியுள்ள கடிதத்தில், “பட்டருடே மட்டன் கறி படம் இன்னும் தணிக்கைக்காக மத்திய தணிக்கை குழுவிற்கு சமர்ப்பிக்கபடவில்லை, ஒளிப்பதிவு சட்டம் 1952 ன் விதிகளின் படி தணிக்கை குழு தணிக்கையில் ஈடுபட்டு வருகிறது. மேலும், அந்தப் படம் தணிக்கை குழு முன் சமர்பிக்கப்பட்ட பின் அதன் தலைப்பு மிகுந்த கவனத்தோடு தணிக்கை செய்யப்படும்” என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதற்கு முன்னரே கேரள பார்ப்பனர்கள் சங்கம் இந்தப் படத்தின் தலைப்பில் குறிப்பிட்டுள்ள ‘பட்டர்’  என்ற பெயர் பார்ப்பனர்களைக் குறிப்பிடக்கூடிய சொல் என்றும்  பார்ப்பனர்கள் சைவர்கள், ஆனால் பார்பனர்களோடு மட்டன்கறி குறிப்பிடப்பட்டுள்ளது அவர்களை இழிவு படுத்துவதாக உள்ளது. எனவே, இந்தப் படத்தைத் தணிக்கை குழுத் தணிக்கை செய்யக் கூடாது என குறிப்பிட்டு தணிக்கை குழுவுக்குக் கடிதம் எழுதியிருந்தது.

நடிகை பார்வதி திரைப்பட சர்ச்சை – தணிக்கை குழு அதிகாரியை நீக்க கோரிக்கை

இந்நிலையில், இந்தப் படம் தற்போது “பட்டணத்தில் மட்டன் கறி” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்