Aran Sei

“எல்லா இந்தியருக்கும் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ உரிமை உள்ளது” – ராகுல் காந்தி

சுகாதார துறை செயலர் கொரோனா தடுப்பூசி அளிக்கப்படுவது குறித்து தெரிவித்த கருத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்துத்துவ அமைப்புகளை ஒன்றிணைந்து எதிர்கொள்வோம் – ராகுல் காந்தி

நேற்றைய தினம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுகாதார துறை செயலர் ராஜேஷ் பூஷன், கொரோனா தடுப்பூசி தேவையுள்ளவர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும், தேவைப்படுபவர்களுக்கு எல்லாம் செலுத்தப்பட முடியாது என்று தெரிவித்திருந்தார்.

எனது ஆட்சியில் வளர்ச்சியைவிட வேலைவாய்ப்புகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் – ராகுல் காந்தி

மேலும், இறப்பு விகிதத்தைக் குறைப்பதே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதன் நோக்கம் என்றும் ராஜேஷ் பூஷன் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இதற்குப் பதிலளிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி,
“தேவையுள்ளவர்கள், தேவைப்படுபவர்கள் என்பது தேவையற்ற உரையாடல், எல்லா இந்தியருக்கும் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ உரிமை உள்ளது” என்று கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்