Aran Sei

“தேர்தலில் பெரும் வெற்றி பெறுவேன்” – மோடிக்கு பதிலளித்த மம்தா பானர்ஜி

ந்திகிராம் தொகுதியில் வரலாறு காணாத வெற்றியைப் பெறுவேன் என்பதால் வேறு எந்தத் தொகுதியிலும் நான் போட்டியிட வேண்டிய அவசியமில்லை” என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் தேர்தலைச் சந்தித்தது. இங்கு மம்தாவுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி அவருக்கு எதிராகப் போட்டியிட்டுள்ளார்.

எனது ஆட்சியில் வளர்ச்சியைவிட வேலைவாய்ப்புகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் – ராகுல் காந்தி

மேற்குவங்க மாநிலம் உலூபெரியா தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி, “நந்திகிராமில் இருந்து நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்பதை உங்கள் நடவடிக்கை காட்டுகிறது. தீதி… ஓ… தீதி, (சகோதரி ஓ! சகோதரி) நீங்கள் வேறொரு தொகுதியில் இருந்தும் வேட்புமனுவை தாக்கல் செய்யபோவதாக வதந்தி பரவுகிறது. அதில் ஏதாவது உண்மை இருக்கிறதா?” என பேசியிருந்தார்.

“இந்தத் தேர்தல் தமிழ் மக்களுக்கும் பாசிச சக்திகளுக்கும் இடையில் நடக்கும் யுத்தம் – ஸ்டாலின்

இதற்குப் பதிலளிக்கும் வகையில், கூச்பிஹாரில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி “நந்திகிராம் தொகுதியில் நான் வரலாறு காணாத வெற்றியைப் பெறுவேன். ஆதலால், வேறு தொகுதியில் போட்டியிட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அப்படியே இருந்தாலும், நீங்கள் இந்த விஷயத்தில் எங்களுக்கு யோசனை கூறவோ, அறிவுரை கூறவோ தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும் போது, ”நாங்கள் உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கிடையாது. எனவே, எங்களைக் கட்டுப்படுத்த நீங்கள் முயற்சிக்க வேண்டாம். முடிந்தால், உங்கள் கட்சியினரை கட்டுப்படுத்துங்கள்” என்று பேசியுள்ளார்.

திமுக தலைவர் மகள் வீட்டில் வருமானவரி சோதனை – கைப்பற்றிய பணத்தை திரும்ப அளித்த அதிகாரிகள்

பாஜக ஆளும் மாநிலத்திலிருந்து தேர்தல் பாதுகாப்பு படையினரை கொண்டு தேர்தல்களைக் கட்டுப்படுத்துவதாகவும், நந்திகிராமில் வாக்காளர்களை மிரட்டுவதற்காக மம்தா குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: NDTV

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்