Aran Sei

“தெருமுனையில் பெண்களை கேலி செய்யும் விடலைகள்போல் பிரதமர் செயல்படுகிறார்” – மஹுவா மொய்த்ரா விமர்சனம்

தெருமுனைகளில் அமர்ந்து கொண்டு பெண்களை கேலி செய்யும் விடலைகள்போல் பிரதமர் மோடி செயல்படுகிறார்” என்று மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் நாடாளுமன்ற உறுப்பினரும், திரிணாமுல் கட்சியைச் சேர்ந்தவருமான மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.

மம்தா வேறு தொகுதியில் போட்டியிட விரும்புகிறாரா? என தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பேசியதற்கு பதிலளிக்கும் விதமாக அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம் உலூபெரியா தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி, “நந்திகிராமில் இருந்து நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்பதை உங்கள் நடவடிக்கை காட்டுகிறது. தீதி… ஓ… தீதி, (சகோதரி ஓ! சகோதரி) நீங்கள் வேறொரு தொகுதியில் இருந்தும் வேட்புமனுவை தாக்கல் செய்யபோவதாக வதந்தி பரவுகிறது. அதில் ஏதாவது உண்மை இருக்கிறதா?” என பேசியிருந்தார்.

பாஜக வேட்பாளரின் வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் – எதிர்கட்சிகள் முற்றுகையிட்டதால் வன்முறை

இது தொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாமுன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, “இரண்டாவது தொகுதியில் போட்டியா? என மம்தாவை மோடி கேட்கிறார். அப்படி போட்டியிட்டால் அது வாரணாசியாக இருக்கும். பிரதமரே உங்கள் கவசத்தை அணியுங்கள்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், மம்தாவை தீதி… ஓ… தீதி என மோடி அழைத்தது, தெருமுனை சுவரில் அமர்ந்து கொண்டு, பெண்களைக் கேலி செய்யும் நபர்களின் செயல்களைப் போன்று இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Source : NDTV

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்