Aran Sei

கர்நாடகாவில் கொரோனா பாதித்த 3 ஆயிரம் பேர் தலைமறைவு –பரவல் அதிகரிக்கும் என அறிவித்த மாநில அரசு

Karanataka CM Eduyurappa

ர்நாடகாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 3 ஆயிரம் பேர் தலைமறைவாகி இருப்பதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய ர்நாடக அமைச்சர் அஷோகா, ”நாங்கள் மருந்துகளை இலவசமாக அளிப்பதன் மூலமே 90% விழுக்காடு மக்கள் குணமடைகின்றனர். ஆனால் பெங்களூருவில் கொரோனா பாதித்த 2,000 முதல் 3,000 வரை உள்ளவர்கள் மாயமாகி உள்ளனர். அவர்கள் வீடுகளிலும் இல்லை, செல்போன்களும் அனைத்து வைக்கப்பட்டுள்ளது. எங்குச் சென்றார்கள் என்றே தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.

’ரெம்தேசிவிர் மருந்து செலுத்த புதிய விதி: ‘மக்கள் சாக வேண்டும் என மத்திய அரசு நினைக்கிறது – நீதிமன்றம் குற்றச்சாட்டு

மேலும், “உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படும் போது இவர்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள். இது தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே தொற்று அதிகமாக பரவி வருகிறது. எனவே இவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு காவல்துறையினரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கர்நாடகாவில் நாளொன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால், 14 நாட்கள் ஊரடங்கை முதலமைச்சர் எடியூரப்பா அமல்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : The Hindu Tamil

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்