Aran Sei

இந்தியச் சிறைகளில் உள்ள கைதிகளில் 30% பேர் இஸ்லாமியர்கள் – பாஜக ஆளும் மாநிலங்களில்தான் அதிகமானவர்கள் சிறை வைப்பு

ந்தியச் சிறைகளில் உள்ள தடுப்புக் காவல் கைதிகளின் மொத்த எண்ணிக்கையில் 30 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள் என்பது தெரியவந்துள்ளது. இது, நாட்டிலுள்ள மொத்த இஸ்லாமியர் மக்கள்தொகையான 14.2 சதவீதத்தை விட இரண்டு மடங்கு அதிக விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தரவுகள், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2021-ம் ஆண்டிற்கான ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவிலுள்ள சிறைச்சாலைகளில், குற்றவாளிகள் (ஒரு குற்றத்திற்காக அடையாளம் காணப்பட்டு குற்றாவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள்), விசாரணைக் கைதிகள் (நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளின் கைதிகள்) தடுப்புக் காவல் கைதிகள் (விசாரணையின்றி சட்டரீதியாக காவலில் கைதாகி இருப்பவர்கள்) மற்றும் இந்த மூன்று பிரிவுகளிலும் சேராத பிறக் கைதிகள் என நான்கு வகையான கைதிகள் உள்ளனர். இதில் நான்காவது வகையினர் மிகவும் குறைவாக இருப்பர்.

பண வீக்கத்தைப் பற்றி கவலைப்படாத நிர்மலா சீதாராமன் சாமானிய மக்களிடமிருந்து விலகி நிற்கிறார் – ப.சிதம்பரம் விமர்சனம்

குறிப்பாக, அசாமில் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களில் 61 சதவீதத்தினரும், விசாரணைக் கைதிகளில் 41 சதவீதத்தினரும் இஸ்லாமியர்கள். அந்த மாநிலத்தின் மக்கள் தொகையில் இஸ்லாமியர் மக்களின் எண்ணிக்கை 34 சதவீதமே. ஒப்பீட்டு அளவில் மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கையை விட, சிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகளாக உள்ள இஸ்லாமியர்களின் எண்ணிக்கை குஜராத், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, ஜம்மு – காஷ்மீரில் அதிகமாக உள்ளது.

பத்திரிகையாளர் சித்திக் கப்பன் வழக்கு – பிணை கிடைத்தும் சிறைக் கதவு திறக்காத அவலம்

கீழ்கண்ட அட்டவணை, 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள மொத்த இஸ்லாமியர் மக்கள் தொகையினையும், 2021-ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியச் சிறைகளில் உள்ள குற்றவாளிகள், விசாரணைக் கைதிகள், தடுப்புக் காவலில் உள்ளவர்களில் இஸ்லாமியர்களின் சதவீதங்களைக் காட்டுகிறது. இதில் நீலம் குற்றாவாளிகளின் சதவீதம், மஞ்சள் விசாரணைக் கைதிகள், பச்சை என்பது தடுப்புக் காவலில் உள்ளவர்களின் சதவீதங்களை காட்டுகிறது.

கீழே உள்ள அட்டவணை இந்தியாவின் 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்துக்களின் மொத்த மக்கள் தொகையினையும், 2021-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியச் சிறைகளில் குற்றவாளிகள், விசாரணைக் கைதிகள், தடுப்புக்காவலில் உள்ளவர்களில் இந்துக்களின் சதவீத்தை காட்டுகிறது. இதில் நீலம் குற்றவாளிகள், மஞ்சள் விசாரணைக் கைதிகள், பச்சை தடுப்புக் காவலில் உள்ளவர்களின் சதவீதங்களைக் குறிக்கிறது.

நிறம் வாரியாக இஸ்லாமியர் கைதிகளின் எண்ணிக்கை: கீழ்கண்ட அட்டவணையில் 2011-ம் ஆண்டின் மக்கள்தொகையின் அடிப்படையில் இஸ்லாமியர்களின் சதவீதத்தையும் (கருப்பு புள்ளிகள்), 2021-ம் ஆண்டு நிலவரப்படி சிறைகளில் உள்ள இஸ்லாமியர் குற்றாவளிகளின் (மஞ்சள் புள்ளிகள்) சதவீதம், விசாரணைக் கைதிகளின் (பிங்க்) சதவீதம், தடுப்புக் காவலில் உள்ளவர்களின் (நீலம்) சதவீதத்தையும் காட்டப்பட்டுள்ளது. இதில், பல மாநிலங்களில் தடுப்புக் காவலில் உள்ள இஸ்லாமியர் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள போதிலும், மொத்த விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கையில் (அடைப்புக்குறிக்குள் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது) சில மாநிலங்களிலேயே மிக அதிகமாக உள்ளது. எனவே, இஸ்லாமியர் கைதிகளின் எண்ணிக்கை மொத்தக் கைதிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட வேண்டும்.

தடுப்புக் காவல் கைதிகளின் எண்ணிக்கை ஒப்பீட்டு அளவில் ஜம்மு – காஷ்மீர், உத்தரப் பிரதேசம், குஜராத், ஹரியாணா, தமிழ்நாடு, நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலேயே அதிகமாக உள்ளது. இவற்றில் குஜராத், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இஸ்லாமியர் கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

பாஜக ஆளும் ம.பி.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மூன்று வயது குழந்தை – குற்றஞ்சாட்டப்பட்டவர் கைது

மகராஷ்டிரா மாநிலத்தில் கைதிகள், விசாரணைக் கைதிகள் மதரீதியாக பிரிக்கப்படவில்லை. ஆந்திரப் பிரதேசம், தெலங்கானாவில் மக்கள்தொகை பிரிவுகள் கிடைக்காததால் அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை

Source: The HINDU

Rooster Rahul decoding the lies of Karthik Pillai K Tv in Kallakurichi Sakthi School issue | Aransei

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்