Aran Sei

‘பதவிக்காலத்திற்கு முன்பே விருப்ப ஓய்வு பெறும் அதிகாரிகள்’ – அரசின் அழுத்தம்தான் காரணமா?

உத்தரபிரதேச மாநிலத்தைச் சார்ந்த ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாக்கூர் அவாஸ்தி பணிக்காலம் முன்பே விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் ” தற்போது தான் விருப்ப ஓய்வுக்கான ஆணை வந்தது, அரசுக்கும் என் சேவை தேவையில்லை , ஜெய் ஹிந்த் ” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கட்டாயமதமாற்றம் எனக்கூறி பஜ்ரங்தளம் போராட்டம் – ரயில்பயணத்தில் பாதிவழியில் இறக்கிவிடப்பட்ட கன்னியாஸ்திரிகள்

அமிதாப் தாக்கூரின் பணிக்காலம் வருகின்ற 2028 ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில் அவர் அரசின் அழுத்தத்தால் தற்போது விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார் என்றும் என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாக்கூரின் செயல்பாடுகளினால் கடந்த சமாஜ்வாதி ஆட்சி காலத்திலும் தற்போதைய பாஜகவின் ஆட்சியிலும் அவருக்கும் அரசுக்கும் பிரச்சனை நிலவியதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘விவசாயிகள் போராட்டம் தீவிரமடைவதால், லக்னோவில் ஏப்ரல் 5 வரை ஊரடங்கு’ – உத்தரபிரதேச காவல்துறை அறிவிப்பு

கடந்த ஜூலை 15,2015 அன்று அப்போதைய சமாஜ்வாதி ஆட்சியின்போது அந்தக் கட்சியால் அவர் மிரட்டப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்ததாக என்டிடிவி செய்தி கூறுகிறது.

உத்தரபிரதேசம் உன்னாவில் மீண்டும் பயங்கரம் – 2 தலித் சிறுமிகள் சடலமாக மீட்பு; ஒருவர் கவலைக்கிடம்

இதைத் தொடர்ந்து லக்னோ நீதிமன்ற அமர்வு தலையிட்டு அமிதாப் தாக்கூரின் இடைநீக்கத்தை தடை விதித்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு வேறொரு துறைக்கு மாற்றக்கோரி அவர் மத்திய அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அந்தக் கோரிக்கை 2017 ஆம் ஆண்டு அரசால் நிராகரிக்கப்பட்டகவும் என்டிடிவி செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில்ஐபிஎஸ் அதிகாரிஅமிதாப் தாக்கூர்  விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்

உத்தரபிரதேச மாநிலத்தில் பணிக்காலம் முடியும் முன்பே பதிவு விலகும் மூன்றாவது ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாக்கூர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்