Aran Sei

கூவம் ஓரத்தில் மரம் நடும் திட்டம் – அதிகாரிகளின் அலட்சியத்தால் 36 கோடி அரசுக்கு நஷ்டம்

சென்னை நகரை அழகுபடுத்தும் பணியின் ஒரு பகுதியாகக் கூவம் நதிக்கரையில், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை (சி.ஆர்.ஆர்.டி) சார்பில், மரக்கன்றுகள் நடும் பெரிய திட்டம், நடைமுறைப்படுப்பட்டு வருகிறது. ஆனால் இத்திட்டத்திற்கு நிதியளிக்கும் தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டம் உள்ளிட்ட பிரச்னைகளால் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவது தொடர்பாகக் கேள்வி எழுந்துள்ளது.

கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்து பருத்திப்பட்டு வரை 60 கிலோமீட்டர் தொலைவிற்கு கூவம் ஆற்றின் குறுக்கே 4.53 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் முதல் பிரச்னையே அது தொடங்கப்பட்ட  காலம். பிப்ரவரி மாதம் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. சுவாமி சிவானந்தா சாலை பகுதியில், மரக்கன்றுகள் நடும் பகுதியைச் சென்று பார்த்தபோது  மரக்கன்றுகள் காய்ந்திருந்தன.

அதிகரிக்கும் கொரோனா தொற்று: ‘கிரிக்கெட்டுக்கு அனுமதியில்லை, லட்சக்கணக்கானோர் கூடும் கும்பமேளாவுக்கும் அனுமதியா?’ – திக்விஜய் சிங் கேள்வி

பெரிய அளவில் நடவு நிகழ்விற்கு செப்டம்பர் மாதமே சிறந்ததாக இருக்கும். பருவமழைக்கு முன் வேர்கள் பழக்கப்படுத்தலுக்கு போதிய நேரம் கிடைக்கும், கோடைக் காலத்தில் அதுக்கு வாய்ப்பிருக்காது என பல்லுயிர் விஞ்ஞானி எஸ்.ஆறுமுகம் கூறினார்.

இதுகுறித்து, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் அதிகார்பூர்வ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கு பொறுப்பாளரிடம் கேட்டபோது, ”மரக்கன்றுகள் காய்ந்து வருவதாலும், கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதாலும், ஜூன்- ஜூலை மாதம்வரை  மரக்கன்றுகள் நடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடப்பட்ட மரக்கன்றுகள் செழித்து தேவையான பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என தெரிவித்தார்.

மார்ச் 1 ஆம் தேதியிட்ட அறக்கட்டளையின் அறிக்கையில் 20,224 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மற்றொரு கவலைத்தரும் விசயம் என்னவென்றால், கூவம் நதியில் எத்தனை கழிவு நீர் குழாய்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ளாமல் அறக்கட்டளையினர் மர நடும் பணியை மேற்கொண்டு இருக்கின்றனர். ஏனென்றால் 2010 ஆம் ஆண்டில், கூவம் நதிக்கரையில் தனியார் நிறுவனம் சார்பில் நடப்பட்ட 300 மரக்கன்றில், 10 மரங்கள் மட்டுமே பிழைத்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

வங்கி ஊழியர்கள் போராட்டம்: ‘லாபம் தனியாருக்கு நஷ்டம் நாட்டிற்கு’ – ராகுல் காந்தி விமர்சனம்

இரண்டாவது கவலை சி.ஆர்.ஆர்.டி  ஒப்பந்த ஆவணங்களில் மரக்கன்று விலை, தொழிலாளர் கூலி, பராமரிப்பு செலவு, மேற்பார்வை செலவு ஆகியவை வகைப்படுத்தப்படவில்லை. ஒரு மரக்கன்றுக்கு 704 ரூபாயகவும், அதற்கான தொழிலாளர் கூலி, பராமரப்பு மற்றும் மேற்பார்வை செலவிற்கு மொத்தமாக 808 ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. சி.ஆர்.ஆர்.டி ஆவணங்களில் குறிப்பிட்டிருந்த  மரக்கன்றுகளின் விலையை ஆய்வு செய்ததில், பெரும்பாலான மரங்களின் விலை ரூ 250 முதல் 400 வரை இருந்ததாகவும், ஏக்லே மர்மெலோஸ் மற்றும் ஃபிகஸ் ரேஸ்மோஸா போன்ற சில மரங்களுக்கு மட்டுமே, 150 முதல் 200 ரூபாய் வரை மட்டுமே செலவாகும் என தெரியவந்துள்ளது.

மொத்தமாகக் கொள்முதல் செய்தால், மரக்கன்றுகளின் விலை பாதியாகக் குறையும் என மரக்கன்று விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். விலை வித்தியாசம் குறித்து அறக்கட்டளை நிர்வாகியிடம் கேட்டபோது, மரக்கன்றுகளின் இறப்பை வைத்து இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். ”ஒரு மரக்கன்று காய்ந்தால், அதை மாற்ற வேண்டும், அதற்குத் தனியாக விலை வைக்க முடியாது. எனவே அவற்றின் விலையை  இதில் சேர்க்கப்பட்டுள்ளது. மரங்களை விட செடியின் விலை குறைவாக இருப்பதால், மரங்களில் விலையில் செடிகளின் விலையைச் சரி செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தொடர்பு கொண்டபோது, மதிப்பிடப்பட்ட செலவில் அதிகபட்சமாக 10% மரம் பட்டுப்போவதாக கூறினார். இந்த நிகழ்வில், ஒரு 10% பட்டுப்போகும் செடியின் விலை ரூ 300 கணக்கிடப்படுகிறது என்றால், அதன் மொத்த மதிப்பு ரூபாய் 1.35 கோடி மட்டுமே இருக்கும்.

‘பயமின்றி வாக்களிக்க மாதிரி தேர்தல் வேண்டும்’ – அரசுக்கு வேண்டுகோள் விடுத்த மாற்றுத்திறனாளர்கள் சங்கம்

இது போன்ற அரசின் பல திட்டங்களை மேற்கொண்டுள்ள ஒரு தன்னார்வல நிறுவனத்தின் உறுப்பினர் ஒருவர், பல சந்தர்ப்பங்களில் வழங்குனர் தாமே செடி பட்டுபோகும் தன்மையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு கூடுதல் மரக்கன்றுகளை இலவசமாக வழங்குகின்றனர் என தெரிவித்தார்.

“சமீபத்தில், நாங்கள் 400 மரக்கன்றுகளை வாங்கினோம், மேலும்  இலவசமாக 40 மரக்கன்றுகளை விற்பவர் கொடுத்தார். சி.ஆர்.ஆர்.டி போன்ற மொத்த ஆர்டர்கள் இருந்தால், விற்பவர் கூட செடி பட்டுபோகும் என்பதை கணக்கில் கொண்டு கூடுதலாக செடிகளை கொடுப்பார்” என கொள்முதல் செய்ய ஒப்பந்தம் எடுத்த ஈரோட்டை  சேர்ந்த ஆர்பிபி இன்ப்ரா ப்ராஜெக்ட் லிமிடெட் தன்னார்வல உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

வனத்துறை போன்ற அரசுத் துறைகள் நியாயமான விலையில் அதிக மரக்கன்றுகளை கொள்முதல் செய்ய முடிந்திருக்கும்போது, ஜனவரி மாதம், ஈரோட்டில் இயங்கும், ஆர்.பி.பி., இன்ப்ரா புராஜெக்ட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டது.

எல்ஐசி தனது நிதியை பிஎம் கேர்ஸுக்கு வழங்கியது ஏன்? – நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கேள்வி

மேலும், சில மரங்கள் வளர 5-10 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சென்னை துறைமுகம் – மதுரவாயல் விரைவுச்சாலை திட்டத்தைக் கவனத்தில் கொள்ளாமல், கூவம் ஆற்றின் கரைகளில் கோயம்பேடு வரை இந்தத் திட்டம் நீட்டிக்கப்பட உள்ளது.

கூவம் நதியைச் சீரமைக்க 604.77 கோடி ரூபாய் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டபோது, 9.6 கிலோமீட்டர்கள், துாரம் பராமரிப்புப் பாதைகள், 24 கிலோமீட்டர் நடைபாதைகள், 19 கிலோமீட்டர் சைக்கிள் தடங்கள்,  6,63,788 சதுர மீட்டர்களில் 24 பூங்காக்கள்  என, மொத்தம், 604.77 கோடி ரூபாய் மதிப்பில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. எனினும், நடைபாதைகள் மற்றும் பூங்காக்களுக்குப் பதிலாக, மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன. ஆனால் இது தொடர்பாகத் திருத்தப்பட்ட அரசாணையில் ஒரு தகவலும் இல்லை.

இது தொடர்பாகச் சென்னை நதி சீரமைப்பு அறக்கட்டளையின் மூத்த அதிகாரியைத் தொடர்பு கொண்டபோது, திட்டம்குறித்து பேச இது சரியான நேரம் இல்லை என்றும், திட்டம்குறித்து பேச அறக்கட்டளை செயலாளரிடம் அனுமதி பெற வேண்டும் எனக் கூறினார்

 

நிருபமா விஸ்வநாதன் (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்)

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்