மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 15 வயது சிறுமியின் 28 வார கருவைக் கலைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
பெண்ணின் பெற்றோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி விஷால் தாகட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த பாலியல் வன்கொடுமை குற்றவாளியின் மனைவி: நிராகரித்த பாஜக தலைமை
28 வாரக் கருவைக் கலைப்பது குறித்து முதன்மை மருத்துவ அலுவலரிடம் சான்று பெற்ற பிறகே இந்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
கருக்கலைப்பு சட்டத்தின் படி 20 வாரத்துக்கு மேற்பட்ட கருவைக் கலைக்க உயர்நீதிமன்ற அனுமதி பெற வேண்டும்.
கடந்த நவம்பர் 2020-ம் ஆண்டு 15 வயது சிறுமி அவரது உறவினராலேயே பாலியல் வன்புணர்வுக்கு உள்ளனர். இந்நிலையில் சிறுமியின் உடல் நிலையில் கருவுற்றிருப்பதற்கான அறிகுறிகள் தென்படவே அந்தப் பெண் கருவுற்றிருப்பதை பரிசோதிதனையில் தெரிந்து கொண்ட பெண்ணின் பெற்றோர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
source;PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.