Aran Sei

என்சிசியில் மாற்றுப்பாலினத்தவரை சேர்க்க சட்ட திருத்தம் – மத்திய அரசுக்கு கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு

தேசிய மாணவர் படை (என்.சி.சி) யில் மாற்று பாலினத்தவரும் சேரும் வகையில் தேசிய மாணவர் படை சட்டம் (1948) பிரிவு 6ல் திருத்தம் செய்யுமாறு மத்திய அரசுக்குக் கேரளா உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை (மார்ச் 15) உத்தரவிட்டுள்ளது.

என்.சி.சி.யில் தன்னை சேர்க்க வேண்டும் என்று 23 வயதான மாற்று பாலினத்தவர் ஹினா ஹனீபா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி அனு சிவராமன், திருநங்கை ஒருவர் தேசிய மாணவர் படையில் சேர உரிமை உண்டு என்றும், பாலின சமத்துவத்திற்கு பேணும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிஜிட்டல் செய்தி ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதிகள் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது – மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா திரிவேதி கண்டனம்

திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவி ஹனீபா, என்.சி.சி.யில் சேருவதற்கான முயற்சியை அதிகாரிகள் நிராகரித்ததை அடுத்து கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

‘தலைகீழாக தொங்கவிட்டாலும் எம்மக்களுக்கு துரோகமிழைக்க மாட்டேன்’ – பாஜக சார்பாக போட்டியிட மறுத்த பேராசிரியர்

தனது மனுவில், பள்ளியில் படிக்கும்போது என்.சி.சி.யில் 13 வயதில் சேர்ந்ததாகவும், அப்போது ஆண்களுக்கான பிரிவில்  சேர்க்கப்பட்டதாகவும் அவர் வாதிட்டார். 2019 ஆண்டு ஒரு பாலியல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டபிறகு, பட்டப்படிப்பிற்காகப் பல்கலைக்கழக கல்லூரியில் சேந்தார். அங்கு ஹனீபா என்.சி.சி.யில் சேர முயன்றபோது, இது சட்டத்திற்கு எதிரானது என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டது.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்