Aran Sei

உலகளவில் கொரோனா தொற்றுக்காலத்தில் கஞ்சா பயன்பாடு 4 மடங்கு அதிகரிப்பு – 36 மில்லியன் பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிக்கை

டந்த 2020 ஆம் ஆண்டு ஏறத்தாழ 275 மில்லியன் பேர் போதை மருந்து உட்கொண்டுள்ளதாகவும், 36 மில்லியன் பேர் போதை மருந்துகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் போதை மருந்து மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், கடந்த 24 வருடங்களில் இல்லாத அளவுக்குக் கொரோனா தொற்று காலத்தில் கஞ்சா பயன்பாடு 4 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், உலகம் முழுவதும் 77 நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், 42 சதவீதம் கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

கடந்த 2010-2019 வரை போதைமருந்து பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 22 மடங்கு அதிகரித்ததாகவும், இந்நிலையில், தற்போதைய கணிப்பின்படி 2030 ஆம் ஆண்டுக்குள் போதை மருந்துப் பயன்பாடு, மேலும் 11 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று, 15 – 64 வயதுடையவர்களின் மக்கள் தொகையில் 13% பேர் போதை மருந்து பயன்பட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடுகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்