Aran Sei

காவல்துறை அதிகாரிக்கு எதிராக பாலியல் புகார் – நடவடிக்கை எடுக்காதது ஏனென்று காவல்துறையிடம் நீதிமன்றம் கேள்வி

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குநரை (டிஜிபி) இதுவரை ஏன் பணியிடை நீக்கம் செய்யவில்லை எனக் காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணை  தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குநர் (டிஜிபி) ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் எஸ்.பி. ஒருவர் டிஜிபி-யிடம் புகார் அளித்தார். இவ்வழக்கை விசாரணைக்குத் தானாக முனவந்து ஏற்ற சென்னை உயர்நீதி மன்றம், “பாதிக்கப்பட்டவர், ஒரு துணை ஆணையர் அல்லது ஒரு காவலர் போன்ற அதிகாரி படிநிலையில் கீழ் நிலையில் இருக்கும் நபராக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கவே இந்த நீதிமன்றம் நடுங்குகிறது” என்று தெரிவித்திருந்தது.

காவல்துறை அதிகாரிக்கு எதிராக பாலியல் புகார் – சாதாரண பெண்களின் நிலை குறித்து நீதிமன்றம் கவலை

மேலும், “அநேகமாக, சாதாரனமான அதிகாரி இந்த வழக்கில் ஒரு புகாரைக் கூட வழங்கியிருக்க முடியாது. இந்த  நிலையில்தான் பெண் அதிகாரிகள் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால், பின்னணி இல்லாத ஒரு சாதாரண பெண்மணிக்கு இது போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் நடந்திருந்தால் என்ன நடக்கும் என்று யோசிப்பது கடினம்” என்றும் நீதிபதி குறிப்பிட்டு விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, சிறப்பு டிஜிபி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், புகாரை விசாரிக்க, கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு (விசாகா கமிட்டி) அமைக்கப்பட்டது.

சிபிசிஐடி விசாரிக்கத் தொடங்கிய பின் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

‘பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சருக்கு ஆதரவாக செயல்படும் பாஜக அரசு’ – பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள் கண்டனம்

இந்நிலையில், பெண் எஸ்.பி. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான விவகாரத்தில் தானாக முன்வந்து வழக்கை விசாரனைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கைத் தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைத்தார்.

அந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷே விசாரிக்கலாம் என தலைமை நீதிபதி அனுமதி அளித்ததன் அடிப்படையில் இன்று(மார்ச் 12)  அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது,  விசாகா குழுவில் உள்ள ஒருவர் எவ்வித விசாரணையும் இல்லாமல் தன்னை தூக்கிலிட வேண்டுமென வாட்ஸ் அப்பில் விமர்சிக்கிறார் என சிறப்பு டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடவுளின் சக்தியை அதிகரிக்க கோயிலுக்கு அடியில் தங்கத்தைப் புதைத்த நீதிபதிகள்: குற்றவழக்குப் பதிய உத்தரவிட்ட நீதிமன்றம்

அப்போது நீதிபதி, பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க வந்த பெண் அதிகாரியைத் தடுத்தார் என எஸ்.பி.-யை மட்டும் சஸ்பெண்ட் செய்த நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறப்பு டிஜிபி-யை சஸ்பெண்ட் செய்யாதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

பெண் எஸ்.பி.-க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீதான விசாரணை அறிக்கையை மார்ச் 16 அன்று, தாக்கல் செய்யக் காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை உயர் நீதிமன்றம் உன்னிப்பாக கண்காணிக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்