Aran Sei

‘கொரோனா இரண்டாம் அலையில்  270 மருத்துவர்கள் தொற்றால் உயிரிழப்பு’ – இந்திய மருத்துவர்கள் சங்கம் தகவல்

கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பால், நாடு முழுவதும் 270 மருத்துவர்கள் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (மே 17), கொரோனா தொற்றால் உயிரிழந்த இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.கே.அகர்வாலும் இந்த எண்ணிக்கையில் அடங்கியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் அதிகப்படியாக பயிற்சி மருத்துவர்கள் 78 பேர் இறந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து உத்தரபிரதேசம், டெல்லி, ஆந்திரா பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முறையே 37, 29, 22 மருத்துவர்கள் இறந்துள்ளனர்.

‘அதிக பணிச்சுமை; குறைந்த உதவித்தொகை’ – உதவித்தொகையை உயர்த்த தமிழக அரசிற்கு பயிற்சி மருத்துவர்கள் வேண்டுகோள்

இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தரவின்படி, கொரோனா தொற்று நோயின் முதல் அலையில் 748 மருத்துவர்கள், பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய அச்சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால், “கடந்த ஆண்டு, இந்தியா முழுவதும் 748 மருத்துவர்கள் கொரோனா தொற்றுக்கு பலியானார்கள். அதே நேரத்தில், தற்போதைய இரண்டாம் அலையில், இக்குறுகிய காலத்தில், 270 மருத்துவர்களை இழந்துவிட்டிருக்கிறோம். இந்த இரண்டாவது அலை அனைவருக்கும் மிக ஆபத்தான ஒன்றாக உள்ளது. குறிப்பாக முன்களப் பணியாளர்களாக இருக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு.” என்று கூறியுள்ளார்.

Source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்