Aran Sei

27 வயது கேரள இளைஞர் கொலை : ஆணவக்கொலையா என சந்தேகம்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் அனீஷ், அவருடைய மனைவியின் உறவினர்களால் ஆணவ கொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது என இண்டியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பெயிண்டர் வேலை பார்த்து வந்த 27 வயதான அனீஷ், மூன்று மாதங்களுக்கு முன் ஹரிதாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, ஹரிதாவின் குடும்பத்தினர் தொடர்ந்து அனீஷிற்கும், ஹரிதாவிற்கும் அச்சுறுத்தல் கொடுத்து வந்தனர் என்கிறது தி நியூஸ் மினிட் இணையதளம்.

மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் என்னைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன – கௌசல்யா

திருமணம் நடந்து மூன்று மாதங்களான நிலையில்,  வெள்ளியன்று, அனீஷ் பைக்கில் சென்று கொண்டிருந்த போது கூலிப்படையினரால் அரிவாளாலும், இரும்புக் கம்பியாலும் தாக்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் நடந்த போது, அனீஷுடன் பைக்கில் இருந்த அனீஷின் சகோதரர் அருண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஹரிதாவின் தந்தை பிரபு குமார் மற்றும் அவருடைய உறவினர் சுரேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் சாதிய பாகுபாடு : ஊர் குழாயில் தண்ணீர் பிடித்ததற்காகத் தாக்கப்பட்ட தலித்

இது குறித்து ஏசியாநெட் செய்தியிடம் பேசிய அருண், மனம் கலபம் எனும் பகுதியில், பிரபு குமாரும்  சுரேஷும், அனீஷை அரிவாளாலும், இரும்பு கம்பியாலும் தாக்கி கொலை செய்ததாக கூறியுள்ளார்.

அனீஷ், கொல்லன் எனும் ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர் எனவும் ஹரிதா ஆதிக்க சாதியான பிள்ளை சமூகத்தைச் சேர்ந்தவர் எனவும் நியூஸ் மினிட் குறிப்பிட்டுள்ளது.

விருந்தின் போது நண்பர்களின் தட்டில் சாப்பிட ஆசை – தலித் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்

“அவர்கள் திருமணம் செய்து கொண்ட பிறகு, காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கே, அனீஷோடு தான் வாழ விரும்புவதாக ஹரிதா கூறினாள். ஆனால், அன்று, ஹரிதாவின் தந்தையும், தாத்தாவும்  ‘தொன்னூறு நாட்கள் கூட ஒன்றாக வாழவிடமாட்டோம்’ என்று மிரட்டினார்கள். இன்று தான் அவர்களுக்கு திருமணம் நடந்து தொன்னூறு நாட்கள் ஆனது. சாதியை விட அவர்களுக்கு எங்களுடைய பொருளாதார நிலைமைதான் பெரிய பிரச்சினை. நாங்கள் ஏழைகள்” என்று நியூஸ் மினிட் தளத்திடம் பேசிய அனீஷின் தந்தை ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

தீப்பெட்டி தராததால் தலித் கொலை – வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது

“என்னுடைய அப்பு (அனீஷ்) எங்கே? அப்பு அங்கேதான் இருக்கிறார். யாராவது அவருக்கு கால் செய்யுங்கள்” என்று கதறி அழுது கொண்டே வீட்டிற்கு வெளியே கணவனை தேடி ஓடும் ஹரிதாவை பார்ப்பது வேதனையளிப்பதாக இருந்ததென நியூஸ் மினிட் தளத்தில் வெளியான கட்டுரை தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்